Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

கமல்ஹாசன் லைன் அப்ஸ்... காத்திருக்கும் இயக்குநர்கள்!

UDHAYA KUMAR Updated:
கமல்ஹாசன் லைன் அப்ஸ்... காத்திருக்கும் இயக்குநர்கள்! Representative Image.

விக்ரம் படத்தால் திடீரென மிகப் பெரிய அளவில் வசூல் வளர்ச்சியை அடைந்தார் நடிகர் கமல்ஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனாக இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பிரபலமானவர்தான் கமல்ஹாசன். ஆனால் தனது கமெர்சியல் பாதையை மாற்றி கலைப் படங்களை அவ்வப்போது எடுக்க நினைத்ததன் காரணமாக மார்க்கெட் சரிந்தது. ஆனால் அதைப் பற்றி கவலைகொள்ளாமல், தன் ஆத்ம திருப்திக்கு ஒரு படம், ஒரு கமெர்சியல் படம் என பண்ணிக்கொண்டு வந்தவர், 1980களுக்குப் பிறகு பெரும்பாலும் நல்ல படங்களையே தேர்ந்தெடுத்து நடித்தார். அவரின் முயற்சிகள் பாராட்டப்பட்டாலும், காசு கொடுத்து பார்க்க யாரும் முன்வரவில்லை என்கிறார்கள். அதை இப்படியும் புரிந்துகொள்ளலாம் வெகுஜன சினிமாவை அவர் நிராகரித்துவிட்டு நல்ல சினிமாக்களை எப்போதும் காணும் வகையிலான சினிமாக்களை நடித்தார். 

ஆனால் இந்த நடைமுறையையும் மாற்றி தனது கமெர்சியல் பாணியில் கலக்கி எடுத்த படம்தான் விக்ரம். தனது சிஷ்யனான லோகேஷ் கனகராஜிடமே தன்னை ஒப்படைத்துக் கொண்டு தயாரிப்பாளர் மற்றும் நடிகராக மட்டும் செயல்பட்டார் கமல்ஹாசன். 

விக்ரம் அதிரி புதிரி வெற்றியை ருசிக்க உலகம் முழுக்க படத்தைக் கொண்டாடினர். வழக்கமாக பொறைமையில் பொங்கும் இந்தி திரையுலகமும் சரி, இந்த முறை சிவப்பு கம்பள வரவேற்பு தந்தது. 

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2, மணிரத்னம் படம், ஹெச் வினோத் படம், லோகேஷ் கனகராஜ் படம், பா ரஞ்சித்துடன் ஒரு படம், வெற்றிமாறனுடன் ஒரு படம் என வரிசையாக பிஸியானார் கமல்ஹாசன். இதனால் வரிசையாக இயக்குநர்கள் லைனில் காத்திருக்க, ஒவ்வொரு படமாக முடிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார் கமல்ஹாசன். 

இதில் அவரது சொந்த வசனம், திரைக்கதையில் வெளியாக இருக்கும் மகேஷ் நாராயணனுடனான படம் மட்டும் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை. காரணம் இது அவரது சொந்த படம் என்பதாலும் கலைப்படைப்பு வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என்பதாலும் தாமதமாகிக்கொண்டு வருகிறது. நாலைந்து படங்கள் மாஸாக அடித்து நொறுக்கிவிட்டு திரும்ப கலைப்படைப்பைத் தொடருவார் என்கிறார்கள். 

மகேஷ் நாராயணனுடன் சேர்ந்து நாமும் காத்திருப்போம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்