Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவை கல்லூரியில் லோகேஷ்! என்ன அப்டேட் தெரியுமா?

UDHAYA KUMAR Updated:
கோவை கல்லூரியில் லோகேஷ்! என்ன அப்டேட் தெரியுமா?Representative Image.

தளபதி 67 படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் நாளை மதியம் கோவையின் பிரபல கல்லூரி ஒன்றுக்கு வருகை தரவுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். அவர் என்ன அப்டேட் தரப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கின்றனர். 

விக்ரம் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜும், வாரிசு படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யும் இணையும் படம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் 100 சதவிகிதம் உறுதியான இந்த படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என திட்டமிடப்பட்டு இப்போது மூன்றாம் கட்டமாக காஷ்மீரில் நடக்கவிருக்கிறது. 

இந்நிலையில், கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருகை தர இருப்பது இணையத்தில் கசிந்தது. இதனை பலரும் தளபதி 67 பட டைட்டில் வெளியீட்டு விழாவுக்காக இயக்குநர் வருகை தருகிறார் என திரித்து எழுதி வருகின்றனர். உண்மையில் அவர் வருவது மைக்கேல் பட விழாவுக்கு என்பது நமது குழு இறங்கி விசாரித்தபோது தெரியவந்தது. 

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படமான மைக்கேல் பிப்ரவரி 3ம் தேதி ரிலீசாகவுள்ளது. அதற்கான புரமோசன் பணிகளுக்காகவே லோகேஷ் கனகராஜ் கல்லூரிக்கு வருகை தருகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்