Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வனில் கமல்ஹாசன்.... வேற லெவலுக்கு இருக்கப்போகுது!

Udhaya Kumar July 08, 2022 & 21:44 [IST]
பொன்னியின் செல்வனில் கமல்ஹாசன்.... வேற லெவலுக்கு இருக்கப்போகுது!Representative Image.


மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், சரத்குமார், நெப்போலியன்   உள்ளிட்ட பலர் நடித்துள்ள சோழ வரலாற்றின் கதையை வடித்துள்ள பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளிவரவுள்ளது. 

பொன்னியின் செல்வன் படம் தமிழ் மொழி மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உலகம் முழுக்க வெளியாக காத்திருக்கிறது. தமிழில் வெளியான புதினங்களில் மிகப் பிரம்மாண்டமான ஒன்று பொன்னியின் செல்வன். சோழர்களுக்குள் நடந்த  வரலாற்று தொடர்பான உண்மை நிகழ்வுகளை புனைவுகளுடன் கொண்டு உருவாகியுள்ளது. 

விக்ரம் தொடங்கி தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படத்தில் கமல்ஹாசன் இல்லாமல் போய்விட்டாரே என பலரும் வருத்தப்பட்டனர். காரணம் இந்த படத்தை எடுக்க நினைத்தவர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். அதிலும் மணிரத்னம் கமல்ஹாசனின் நெருங்கிய உறவினர். இதனால் அவரது பங்கு இந்த படத்தில் இருந்தால் நிச்சயம் அதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதே பலரின் எண்ணம். 

இதற்கிடையில் தற்போது வெளிவந்துள்ள ஒரு தகவலின்படி, இந்த படத்தில் கமல்ஹாசனும் பங்கேற்றுள்ளார். அவரின் குரல் இந்த படத்தில் வரப்போவதாக தகவல் தெரிவிக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை அவரின் குரல் ஒலிக்குமாம். இந்த விசயம் குறித்த உண்மைத் தன்மை தெரியவில்லை. எனினும் இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நிச்சயமாக படம் வேறு லெவலுக்கு எதிர்பார்ப்பு கிளம்பும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்