Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சீயான் விக்ரம் எவ்ளோ ஸ்மார்ட்டா இருக்காரு பாருங்க! கோப்ரா ஸ்டில்ஸ்...!

Udhaya Kumar July 08, 2022 & 16:22 [IST]
சீயான் விக்ரம் எவ்ளோ ஸ்மார்ட்டா இருக்காரு பாருங்க! கோப்ரா ஸ்டில்ஸ்...!Representative Image.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து முடித்துள்ள திரைப்படம் கோப்ரா. பல வேடங்களில் வரும் விக்ரமுக்கு இந்த படத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் தீவிர வேண்டுதலாக இருக்கும். காரணம் உயிரைக் கொடுத்து நடிக்கும் விக்ரம் கதையை சரியாக தேர்ந்தெடுப்பதில்லை என்கிற அவச்சொல் பல ஆண்டுகளாகவே இவரின்மீது இருக்கிறது. 

விக்ரமின் பட வரிசையில் சாமி, தூள், தில் என ஒரு காலத்தில் தொடர் வெற்றிகளைக் கொடுத்தவர், சமீப நாட்களில் வெற்றிக்காக மிகவும் தடுமாறுகிறார். ஷங்கரின் அந்நியன் படத்தில் இந்திய அளவில் மார்க்கெட் பிடித்த விக்ரம், ஐ படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டாலும் படத்தில் பெரிய தாக்கம் ஏற்படாததால் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்தார். 

இந்நிலையில்தான் விக்ரமின் இந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றியை சரமாரியாகத் தர வரிசையாக படங்கள் காத்திருக்கின்றன. அதில் முதலில் வெளியாக இருப்பது கோப்ரா.  வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவுள்ள கோப்ரா திரைப்படத்தில் வரும் பாடல் காட்சியின் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. 


Image

Image

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்