Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கமல்ஹாசனின் புதிய படத்தில் வடிவேலு! வேற லெவலுக்கு மாறும் புதிய படம்!

UDHAYA KUMAR June 08, 2022 & 21:27 [IST]
கமல்ஹாசனின் புதிய படத்தில் வடிவேலு! வேற லெவலுக்கு மாறும் புதிய படம்!Representative Image.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காயத்ரி, செம்பன் வினோத், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நிறைந்த படமாக வெளிவந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் யாருடன் இணையப் போகிறார் என்கிற கேள்விக்கான பதிலை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியன் 2 தொடங்கி நடைபெறுமா அல்லது தலைவன் இருக்கிறான் தொடங்குமா, கமல்ஹாசனின் பல படங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதே அவற்றில் ஏதேனும் ஒன்று தொடங்குமா என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் கமல்ஹாசனின் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், கமல்ஹாசன் விரைவில் மகேஷ் நாராயணனுடன் இணையப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அது தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது. தலைவன் இருக்கிறான் எனும் பெயரில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் படம் முழுக்க வரும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்