Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய், அஜித்தை ஓரங்கட்டிய கமல்! தெலுங்கில் அமோக வசூல் !

UDHAYA KUMAR June 08, 2022 & 14:45 [IST]
விஜய், அஜித்தை ஓரங்கட்டிய கமல்! தெலுங்கில் அமோக வசூல் !Representative Image.

உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிப்பின் நாயகன் சூர்யா, நரேன், பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகப் பெரிய அளவில் வசூல் மழை பொழியும் திரைப்படம் விக்ரம். உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வேட்டை நடத்தி வரும் படம், தெலுங்கு மொழியில் வேற லெவலுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழ்நாட்டில் 4 நாட்களில் 77 கோடி ரூபாயும், 5வது நாளில் கிட்டத்தட்ட 25-30 கோடி ரூபாய் அளவுக்கும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படியென்றால் 100 கோடி வசூலை தமிழகத்திலேயே பெற்றுள்ளது விக்ரம் திரைப்படம். உலக அளவில் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் சாதனை செய்துள்ளது கமல்ஹாசனின் விக்ரம். இதுமட்டுமின்றி ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் வேறு லெவலுக்கு புரட்டி போட்டுள்ளது விக்ரம் புயல். 

4 நாட்களில் தெலுங்கு மொழியில் விக்ரம் திரைப்படம் 15.7 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. இதன்மூலம், பீஸ்ட், வலிமை ஆகிய படங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது விக்ரம். கர்நாட மாநிலத்திலும் 12.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்