Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதலிடத்தில் கமல்.. அடுத்தடுத்து 5 முறை விஜய்.. 10வது இடத்தில் ரஜினி! தலைகீழாய் மாற்றிப் போட்ட விக்ரம் வெற்றி!

Udhaya Kumar July 13, 2022 & 12:25 [IST]
முதலிடத்தில் கமல்.. அடுத்தடுத்து 5 முறை விஜய்.. 10வது இடத்தில் ரஜினி! தலைகீழாய் மாற்றிப் போட்ட விக்ரம் வெற்றி!Representative Image.

கமல்ஹாசனை இதுவரை தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவே கண்டிராத அளவுக்கு ருத்ரதாண்டவம் ஆடிக் காட்டியிருக்கிறது விக்ரமின் வெற்றி. கோடம்பாக்கத்துக்கே நீங்க யார்னு காட்டணும்னு உத்தம வில்லன் திரைப்படத்தில் வரும் வசனத்தைப் போல லோகேஷ் கனகராஜ் ஒரு கிராமத்திலிருந்து வந்து கமல்ஹாசனை உலக  அளவில் வசூல் சக்ரவர்த்தியாக்கிவிட்டார். 

நடிப்புக்கு பெயர் போன கமல்ஹாசன் வசூலுக்கும் பெயர் போனவர்தான் என்பதை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். இப்போது தமிழகத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் விக்ரம் என்றாகிவிட்டது. எப்படியும் அடுத்த விஜய், அஜித், ரஜினி படங்களுக்கு போலி கணக்கு காண்பித்து அதனை பெரிய படமாக காண்பிக்க முயல்வார்கள் என்பதில் ஐயமில்லை. உண்மையை உரக்கச் சொல்லும் நமது SEARCH AROUND WEB இணையதளத்தில் உண்மையான பட்ஜெட், வசூல் விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். 

விக்ரம் படம் 183.35 கோடி ரூபாய் வசூலித்து தமிழகத்தின் டாப் படமாக முதலிடத்தில் உள்ளது. அடுத்து பாகுபலி 2 இரண்டாவது இடத்திலும் கேஜிஎஃப் 2 9வது இடத்திலும் இருக்கிறது.  அஜித்குமாரின் விஸ்வாசம் திரைப்படம் 127 கோடிகள் வசூல் செய்து 6வது இடத்தைப் பிடித்துள்ளது.  மிச்சமுள்ள கடைசி இடமான 10வது இடத்தில் ரஜினிகாந்தின் ஆல் டைம் ஹையஸ்ட் ரெக்கார்டு என அழைக்கப்படும் 2 பாயிண்ட் ஓ திரைப்படம் உள்ளது. 

டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள கமல், விஜய், அஜித், ரஜினி படங்கள் பின்வருமாறு.. 

Top 10 Movies in Tamilnadu Box Office :-

1) #Vikram : 183.35 Cr *
2) #Baahubali2 : 150.25 Cr
3) #Bigil : 144.60 Cr
4) #Master : 142.50 Cr
5) #Sarkar : 128.75 Cr
6) #Viswasam : 127.25 Cr
7) #Mersal : 126.90 Cr
8) #Beast : 120.15 Cr
9) #KGF2 : 115.05 Cr
10) #2Point0 : 114.90 Cr


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்