Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

கமல்ஹாசன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறாரா? உண்மை என்ன?

Udhaya Kumar July 07, 2022 & 13:10 [IST]
கமல்ஹாசன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறாரா? உண்மை என்ன?Representative Image.

தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாக மாறி இருக்கிறார் கமல்ஹாசன். அவரின் முந்தைய படங்களுக்கெல்லாம் விமர்சனங்கள் பாசிடிவாக வந்தும் அவை பாமர மக்களுக்கு புரியாதது போல பிம்பம் அமைக்கப்பட்டு பெரிய அளவில் வெற்றி பெறச் செய்யவிடாமல் தடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தன்னுடைய ரசிகனை குறைத்து மதிப்பிடாத கமல்ஹாசன் மிகவும் நேர்த்தியான படங்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.  ஆனாலும் அவரின் படங்கள் வசூலிக்காது தயாரிப்பாளருக்கு நஷ்டம் என பேசிக்கொண்டிருந்தனர். 

அவர்களின் வாயெல்லாம் அடைக்கும் விதத்தில் லோகேஷ் கனகராஜ் சம்பவம் செய்துவிட்டார். உலகம் முழுக்க வெற்றி நடை போடும் விக்ரம் 5 வாரங்களைக் கடந்தும் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த படத்தைக் குறித்த அறிவிப்பை ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். 

கமல்ஹாசன் எழுதி, தயாரிக்கும் புதிய படத்தை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார். ஸ்க்ரிப்ட் பணிகள் துரிதகதியில் நடந்துகொண்டிருக்கின்றன. 

இதனிடையே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தை விரைவில் துவங்குவார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். டான் பட விழாவில் பேசிய உதயநிதி இந்த தகவலைப் பகிர்ந்ததும் லைகா நிறுவனம், ஷங்கர், கமல்ஹாசன் என மூன்று தரப்பினரிடமும் உதயநிதி ஸ்டாலின் பேசிவிட்டார் இனி படம் தொடங்கிவிடும் என கோலிவுட் வட்டாரம் தெரிவித்தது. 

இந்நிலையில், இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமே வெளியிடவுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது. இப்படி இருக்கையில், வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் - மகேஷ் நாராயணன் படம் தயாராகிக் கொண்டிருக்க, கமல்ஹாசன் எந்த பட ஷூட்டிங்க்கு முன்னுரிமை தருவார் என்கிற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் இருக்கிறது. 

ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் நடிப்பாரா, அல்லது இந்தியன் 2வை கிடப்பில் போட்டுவிட்டு மகேஷ் நாராயணன் இயக்கும் தனது சொந்த படத்தில் நடிப்பாரா என ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.  இந்தியன் 2 என்பது ஒரு பிராண்ட் என்பதால் அதனை விக்ரம் டிரெண்ட் இருக்கும்போதே வெளியிட்டால் பயங்கர லாபம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. கமல்ஹாசன் தனது முடிவை எடுத்துவிட்டார் என்கிறார்கள். ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் முழுவதும் இந்தியன் 2, அக்டோபர் முதல் நவம்பர் வரை மகேஷ் நாராயணன் படம், இடையில் தேவைப்பட்டால் இரண்டு படங்களிலும் அவ்வப்போது வந்து நடிக்கலாம். ஜனவரிக்குள் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றெல்லாம் கணக்கு போட்டிருக்கிறார்கள். ஆனால் ஷங்கர் இன்னும் ராம்சரண் படத்தை முழுசாக முடிக்கவில்லை என கைவிரித்துவிட்டாராம். 

உதயநிதி ஸ்டாலினிடம் இதனை கொண்டு சென்றிருக்கிறார்கள். விரைவில் இதுகுறித்து ஆடியா லாஞ்ச் மாதிரியான முக்கிய விழா எதாவது ஒன்றில் உதயநிதியே பேசினால்தான் நமக்கு உண்மை விளங்கும். அதற்குள் ஏதாவது அப்டேட் கிடைத்தால் நாமே வெளியிடுவோம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்