Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பெரும்படையோடு பொன்னியின் செல்வன் பாக்கப்போகும் உலகநாயகன்!

UDHAYA KUMAR October 05, 2022 & 15:19 [IST]
பெரும்படையோடு பொன்னியின் செல்வன் பாக்கப்போகும் உலகநாயகன்!Representative Image.

உலகநாயகன் கமல்ஹாசன் கம்பீரக் குரலில் பொன்னியின் செல்வன் திரைக்காவியத்தை நாம் அனைவரும் திரையில் கண்டிருப்போம். சிலர் இந்த வாரம் போயி பார்க்கலாம் என காத்திருப்பீர்கள். அந்த வகையில் கமல்ஹாசன் இன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பெரும்படையுடன் சென்று திரையரங்கில் காணவிருக்கிறார். 

கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி, மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்து மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் பங்குபெற்றார். படமே கமல்ஹாசன் குரலில்தான்  தொடங்குகிறது. படத்தின் கதையை விவரிக்கும் குரலாக கமல்ஹாசன் இந்த படத்தில் பங்கு பெற்றுள்ளார். 

வேளச்சேரி ஐமேக்ஸ் திரையில் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படத்தைக் காணவிருக்கிறார். அவருடன் படத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரும் சேர்ந்து பார்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. மணிரத்னம், சுகாசினியுடன் அருகே அமர்ந்து கமல்ஹாசன் படம் பார்ப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்