Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kamal Vikram Movie: கமல்ஹாசன் கெஞ்சி கேட்டும் அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம் பிரபல நடிகர்…!!

Nandhinipriya Ganeshan [IST]
Kamal Vikram Movie: கமல்ஹாசன் கெஞ்சி கேட்டும் அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம் பிரபல நடிகர்…!!Representative Image.

Kamal Vikram Movie: லோகேஷ் கனராஅஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் "விக்ரம்". மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கமலுடன் ஃபஹத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் சமீப காலமாக அரசியலில் பிஸியாக இருந்துவந்தது நமக்கு அனைவருக்குமே தெரியும். அதனால், திரைப்படங்களில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்தால், தற்போது நான்கு வருடத்திற்கு பிறகு "விக்ரம்" படத்தின் மூலம் நடித்திருப்பதால், அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். மேலும், இப்படத்தின் ஒரு பாடல் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாக ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 

அந்த வகையில், விக்ரம் வரும் ஜூன் 3 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்காக, ஒட்டுமொத்த படக்குழுவும் தீவிரமாக ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளார்களாம். மேலும் சமீபத்தில் விக்ரம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் சில விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். அது உண்மையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று கரணமாக நாடு முழுவதும் ஊரங்கு போடப்பட்டது. இதனால், சினிமா துறையே முற்றிலும் முடங்கியிருந்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், கமல் என்ன செய்தாராம் தெரியுமா? லாக்டவுன் நாட்களில் உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு நாளைக்கு நாலு படம் பார்ப்பாராம். அதுமட்டுமல்லாமல், அந்த நேரத்தை பயன்படுத்து மூன்று கதைகளையும் எழுதியுள்ளாராம். இதனை கேட்ட ரசிகர்கள் வருங்காலத்தில் கமல் இயக்கத்தில் கண்டிப்பாக ஒரு படம் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

மேலும் பேசிய கமல் கடந்த 1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ரேவதி, சிவாஜி கணேசன், கௌதமி உள்பட பலருடம் நடித்து வெளியான படம் தான் "தேவன் மகன்". இந்த படம் அப்பவே மாஸ் ஹிட் அடித்த படம் என்று நமக்கு தெரியும் அல்லவா. இந்த படத்தோட ஹிந்தி ரீமேக் 1997 ஆம் ஆண்டு தயாரானதாம். அப்போது அந்த படத்தில் சிவாஜிகணேசன் கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமாரிடம் கமல்ஹாசன் ஆலோசனை செய்தாராம். 

கமல் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் தற்போது நான் நடிப்பதில்லை என்றும் தனது முடிவை மாற்ற முடியாது என்றும் திலீப்குமார் கூறிவிட்டாராம். இதனை அடுத்து வேறு வழியின்றி அந்த கேரக்டரில் அம்ப்ரிஷ்புரி நடித்தார் எனவும் கமல் அனைவரிடம் பகிர்ந்துக் கொண்டார். கமல்ஹாசன் படத்தில் நடிக்க முடியாது என திலீப் குமார் கூறிய செய்தி தற்போது அவர் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்