Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nayanthara, Vignesh Latest News: வைரலாகும் நயன்-விக்கியின் திருமண பத்திரிக்கை... கல்யாணம் எங்க தெரியுமா...?

Nandhinipriya Ganeshan May 28, 2022 & 19:10 [IST]
Nayanthara, Vignesh Latest News: வைரலாகும் நயன்-விக்கியின் திருமண பத்திரிக்கை... கல்யாணம் எங்க தெரியுமா...?Representative Image.

Nayanthara, Vignesh Latest News: இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வருவது நம் அனைவருக்குமே தெரியும். இந்த கியூட் ஜோடியின் திருமணம் எப்போது என்பது தான் கோலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த ஒரு மாதம் காலமாகவே இவர்களை பத்தின செய்திதான் சமூக வலைத்தளங்கள் முழுவதும் நிரம்பி வழிந்தது. 

இவர்களின் காதல் "நானும் ரவுடிதான்" திரைப்படத்தில் இருந்து பூக்க ஆரம்பித்தது. அன்று தொடங்கி இன்று வரை இந்த கியூட் ஜோடி கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர். தற்போது இவர்களுடைய கல்யாண தேதி வெளியானதோடு இவர்களின் கல்யாணப் பத்திரிக்கையும் லீக்காயி சமூக வலைத்தளங்களில் (nayanthara marriage invitation) வைரலாகி வருகிறது.  அந்த வகையில் கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் வருகின்ற ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம். இந்த திருமண நிகழ்ச்சியில் பல்வேறு மொழி திரையுல பட்டாளமும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீண்ட நாள் கழித்து இந்த சுப செய்தி நயன்தாரா ரசிகர்களுக்கு மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்