Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலகளவில் ரூ.400 கோடி வசூல்...ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன்...இது தான் காரணமா?

Priyanka Hochumin Updated:
உலகளவில் ரூ.400 கோடி வசூல்...ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன்...இது தான் காரணமா?Representative Image.

இந்தியாவைப் பொறுத்த வரை தற்போது தென்னிந்திய திரைப்படங்கள் பான் இந்தியா படங்களாக விஸ்வரூபம் எடுத்து உலகத்தையே கலக்கி வருகிறது. அதில் கன்னட திரைப்படமான  கே-ஜி-எஃப் 1 & 2-ஐ தொடர்ந்து காந்தாரா திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கிடைத்த தகவல் படி, கடந்த வாரம் வரை மட்டும் காந்தாரா படம் உலகளவில் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இதில் எந்தெந்த மாநிலத்தில் எவ்ளோ வசூல் ஆகியிருக்கிறது என்று பார்ப்போம்.

தமிழ்நாடு - 12.70 கோடிகள்

கேரளா - 19.20 கோடிகள்

வெளிநாடு -  44.50

ஆந்திரா, தெலுங்கானா - 60 கோடிகள்

வட இந்தியா (இந்திப் பதிப்பு) - 96 கோடிகள்

கர்நாடகா - 168.50 கோடிகள்

மொத்தம் - 400.90 கோடிகள்.

பழங்குடி மக்கள் சமூகத்தில் ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் தன் மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவன் என்னென்ன சிரமத்தை மேற்கொள்வர் போன்ற அனைத்து விஷயங்களும் மிகவும் தத்ரூபமாக காண்பித்துள்ளனர். இந்த படத்தை பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் ரிஷப் ஷெட்டிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வசூலைப் பார்க்கையில் மற்ற மாநிலம் மற்றும் நாடுகளைக் காட்டிலும் தமிழ்நாட்டில் வசூல் குறைவாக இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், படத்தின் தமிழ் வெர்ஸன் படத்தின் கதையை உணர வைத்தாலும், அந்த அளவுக்கு உணர்ச்சிகளை அளிக்கவில்லை என்று கூறிவருகின்றனர். இதனால் தான் தமிழ்நாட்டில் வசூலை எடுக்க முடியவில்லையா என்றும் தெரியவில்லை.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்