Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மல்டிவெர்ஸ் யுக்தியை கையாளும் கேஜிஎப் படக்குழு...ஸ்பைடன்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போல படமெடுக்க திட்டம்.!

madhankumar May 14, 2022 & 18:17 [IST]
மல்டிவெர்ஸ் யுக்தியை கையாளும் கேஜிஎப் படக்குழு...ஸ்பைடன்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போல படமெடுக்க திட்டம்.!Representative Image.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கேஜிஎஃப் 2’ வசூலில் ரூ.1000 கோடி ரூபாய்யை கடந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாலிவுட்டில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி2’-க்கு அடுத்து கேஜிஎப் 2 தான் உள்ளது. இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.1,170 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முன்னணி நடிகர்களின் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரூ.100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. படம் முழுவது ஆக்சன் காட்சிகள் பில்டப் காட்சிகள் இருந்தாலும் இறுதியில் படம் பார்த்த அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் இயக்குனர் என்றே சொல்லலாம். 

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தரிடம் "கேஜிஎப் 3" படத்தின் சூட்டிங் எப்போது தொடங்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு ஒரு பதில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் "சலார்" படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு 35 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்தவாரம் தொடங்கவிருக்கிறது. வரும் அக்டொபர் அல்லது நவம்பரில் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என நம்புகிறோம். எனவே நாங்கள் வரும் அக்டொபர் மாதம் கேஜிஎப் 3 படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுளோம், மேலும் படமானது வரும் 2024ல் வெளியாகும் என நப்புகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் வேறு ஏதேனும் புதிய நடிகர்கள் உள்ளே வரவிருக்கின்றனரா? அல்லது யஷ் மீண்டும் படத்தில் வருவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள், நாங்கள் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனமான "மார்வெல்" சினிமாஸ் போல தனி யூனிவெர்சை உருவாக உள்ளோம், மேலும் நாங்கள் வெவ்வேறு படங்களில் இருந்து வெவ்வேறு கதாபாத்திரங்களை எடுத்து இந்த படத்தில் இணைக்க உள்ளோம், "அதாவது ஸ்பைடர் மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போன்ற படங்களைப்போல மல்டிவெர்ஸ் யுக்தியை கையாண்டு வெவ்வேறு படங்களில் இருக்கும் கதாபாத்திரங்கள் ஒரே படத்தில் வருவது போல என கூறியுள்ளார்". இது கேஜிஎப் படத்திற்கு மிக பரந்த ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் என நப்புகிறோம் என கூறியுள்ளார். அவரின் இந்த பதில் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்