Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட லத்தி படப்பிடிப்பு....கரணம் தெரியுமா..?

madhankumar July 04, 2022 & 09:27 [IST]
இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட லத்தி படப்பிடிப்பு....கரணம் தெரியுமா..?Representative Image.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் சுனைனா ஆகியோரது நடிப்பில் பான் இந்திய படமாக "லத்தி" உருவாக்கி வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவந்தது, அப்போது எடுக்கப்பட்ட ஒரு சண்டை காட்சியில் டூப் இல்லாமல் நடிகர் விஷால் நடித்தார் அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது, இதனையடுத்து கேரளாவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் குணமடைந்து பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது.

விரைவாக படத்தை முடித்து வெளியிட வேண்டும் என படக்குழுவினர் இரவு பகலாக வேலைப் பார்த்து வந்துள்ளனர். அப்படி நடைபெற்ற சண்டை காட்சியின் போது, எதிர்பாராத விதமாக விஷாலுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. வலியால் துடிதுடித்த விஷாலுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் மருத்துவர் பரிசோதனைக்கு பின்னர் எலும்பு முறிவு ஏதும் இல்லை, ஆனால் சில நாட்கள் பிசியோதெரபி எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து இரண்டாவது முறையாக லத்தி படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்