Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

KH 233, Thalaivar 171, Thalapathy 68, Suriya 44, Ajithkumar 64, Dhanush next அடேங்கப்பா! இப்படி எல்லா படத்துலயும் ஒரே நேரத்தில் இயக்குநர் மாற்றமா?

UDHAYA KUMAR Updated:
KH 233, Thalaivar 171, Thalapathy 68, Suriya 44, Ajithkumar 64, Dhanush next  அடேங்கப்பா! இப்படி எல்லா படத்துலயும் ஒரே நேரத்தில் இயக்குநர் மாற்றமா?Representative Image.


கமல்ஹாசன் படத்தை இயக்கவேண்டியவர் தனுஷ் படத்துக்கு போறாரு, விஜய் படத்தை இயக்க வேண்டியவர் ரஜினி படத்த இயக்கப்போறாரு, அஜித் கிட்ட கதை சொன்ன இயக்குநர் இப்ப சூர்யா கூட கமிட் ஆகுறாரு இப்படி ஒரே குழப்பத்துல இருக்காங்க எல்லா ரசிகர்களும். என்னதான்யா நடக்குது கோலிவுட்டுல?   வாங்க அது பத்தி ஒரு கண்ணோட்டம் பாக்கலாம். 

ரஜினிகாந்தின் அடுத்த படமான தலைவர் 171 படத்தில் யார் இயக்கப்போகிறார் என்கிற தகவல்தான் இப்போதைய ஹாட் டாபிக். இணையதளம் முழுக்க இதைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரதீப் ரங்கநாதன்தான் இந்த படத்தை இயக்கவுள்ளார் என பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. 

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு அவர் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை சூப்பர் ஸ்டார் என்பதால் நிச்சயம் இந்த படத்தை செதுக்கிவிட வேண்டும் என நினைத்து வேலை செய்து வருகிறார் நெல்சன்.  

விஜய் பட இயக்குநரை தேர்ந்தெடுத்த ரஜினிகாந்த், இப்போதும் விஜய் படத்தை இயக்கவேண்டி காத்திருந்த இயக்குநரைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்கிறார்கள். பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே பட வெற்றிக்கு பிறகு, அதே ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ண வேண்டி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அந்த படத்தில் விஜய்யை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. காரணம், விஜய்க்கு ஒரு கதை சொல்லி வைத்திருக்கிறார் பிரதீப். 

ஏஜிஎஸ் நிறுவனத்திடம் விஜய் நடிக்க ஒரு படமும் பேசப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்தை இயக்க விஜய், அட்லீயைத் தேர்வு செய்தார். அட்லீ படத்தின் பட்ஜெட் ஜாஸ்தியாக இருந்ததால், பிரதீப் படத்தை தயாரிக்கலாம் என கணக்கு போட்ட ஏஜிஎஸ்-க்கு இடி மேல் இடி. 

பிரதீப்பைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது லைகா நிறுவனம். லைகா நிறுவனத்துக்கு ரஜினிகாந்த் போட்ட ஒப்பந்தப்படி இரண்டு படங்கள் செய்து கொடுக்கவேண்டும். அதில் ஒன்றாக பிரதீப் ரங்கநாதனை ஒப்பந்தம் செய்துவிட்டனர். இதனால் ரஜினி ஏற்கனவே கேட்டு வைத்திருந்த டான் சிபி கதையை நிராகரித்திருக்கிறார். 

என்ன தல சுத்துதா? 

விஜய் படத்த இயக்குறதா இருந்த பிரதீப் ரங்கநாதன், ரஜினி படத்துக்கு போறாரு, ரஜினி படத்த இயக்குறதா இருந்த சிபி சக்ரவர்த்தி, ராகவா லாரன்ஸ் வச்சி வேற ஒரு படம் பண்றதா சொல்றாங்க. லோகேஷ் கனகராஜுக்கு பிறகு விஜய் படத்த இயக்க அட்லீய ஒப்பந்தம் பண்ணிருக்காங்க. அட்லீ கதையோட பட்ஜெட் அதிகம்னு அவர நிராகரிச்ச ஏஜிஎஸ் அடுத்து அஜித்த வச்சி ஒரு படம் எடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்காங்க. அஜித், சுதா கொங்கரா படம் ஹெச் வினோத் படத்துக்கு அப்றம் நடக்கும்னு பாத்தா, சூர்யா முந்திக்குறாரு. சூர்யா -  சுதா கொங்கரா படம் அதுக்கு முன்னாடியே நடக்கும்னு எதிர்பார்க்கப்படுது.  ஹெச் வினோத் அடுத்து உலகநாயகன் கமல்ஹாசன இயக்குவார்னு பாத்தா அவரு தனுஷ் படத்துக்கு கதை ரெடி பண்ணிட்டிருக்கார்னு சொல்றாங்க. இப்படி கோலிவுட் ரசிகர்களுக்கு ஒரே குழப்பம். இப்ப எந்த நடிகர் அடுத்து எந்த இயக்குநரோட சேரப் போறார்னு குழப்பத்த ஏபமற்படுத்திட்டாங்க PROகள். 

கமல்ஹாசன் லைன்ஸ்அப் ல அடுத்து இந்தியன் 2, மணிரத்னம், ஹெச் வினோத், லோகேஷ் கனகராஜ், மகேஷ் நாராயணன், பா.ரஞ்சித்னு அடுத்தடுத்து இருக்காங்க. ஆனா இதுல இந்தியன் 2வுக்கு அப்றம் என்ன படம்னு கமல்ஹாசனே முடிவு பண்ணலயாம். லைன்ல கௌதம் வாசுதேவ் மேனனும் வெற்றிமாறனும் கூட இருக்காங்க. 

விஜய் தெளிவா இருக்காரு வம்சிக்கு அப்றம் லோகேஷ், அவருக்கு அப்றம் அட்லீ. இந்த படங்களுக்கு அப்றம் மகிழ் திருமேனி படம்னு லிஸ்ட் போட்டு வச்சிருக்காராம்.

அஜித்துக்கு கவலையே இல்ல. ஏன்னா ஹெச் வினோத்துக்கு அப்றம், விக்னேஷ் சிவன். அதுக்கு அப்றம் எந்த படமும் உறுதி செய்யப்படல.

ரஜினிகாந்துக்கு நிறைய குழப்பங்கள் இருக்கு. நெல்சன் படம், அவரோட மகள் படம், பிரதீப் ரங்கநாதன், சிபி சக்ரவர்த்தி, கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமினு யாரு கூட படம் பண்லாம்னு யோசிச்சி யோசிச்சி டயர்டு ஆகிட்டார்

சூர்யாவுக்கு வணங்கான் டிராப் ஆனதால அதுல ரவிக்குமாரோட சயின்ஸ் பிக்சன முடிச்சிடலாம்னு ஒரு எண்ணம். அநேகமா சூர்யா 42க்கு அப்றம் இந்த படமாத்தான் இருக்கும். அதுக்கு அப்றம் சுதா கொங்காரா படம் ஆனா இன்னும் பேச்சளவுலதான் இருக்கு. லைன்ல கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜும் இருக்காங்க. 

தனுஷ் தன்கிட்ட இருந்த நிறைய படங்கள ஒவ்வொன்னா முடிச்சிட்டு கிட்டத்தட்ட தன் பாரமே கொறஞ்சமாதிரி ஃபீல் பண்றாரு. இப்ப கைவசம் ரெண்டு படங்கள்தான் உறுதியாயிருக்கு. ஹெச் வினோத் கூட அடுத்து பண்ண சான்ஸ் இருக்கு. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்