Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி 67 படத்துக்காக லோகேஷ் வாங்கிய சம்பளம் இதுவா? வாயைப் பிளக்கும் கோலிவுட்!

UDHAYA KUMAR June 14, 2022 & 19:43 [IST]
தளபதி 67 படத்துக்காக லோகேஷ் வாங்கிய சம்பளம் இதுவா?  வாயைப் பிளக்கும் கோலிவுட்!Representative Image.

தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் மேலே வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்த இடத்தை தக்கவைக்க பலர் தவறிவிடுகிறார்கள். அதேநேரம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கெரியரை செதுக்கி செதுக்கி மேலே வந்தவர்களில் ஒருவர்தான் லோகேஷ் கனகராஜ். அவரின் சமீபத்திய படமான விக்ரம் மிகப் பெரிய ஹிட் ஆகி, அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தின் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என எடுத்த எல்லாத் திரைப்படங்களிலும் அவருக்கு நல்ல பெயர் வந்துள்ளது.  கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் அவரின் படங்களைப் பார்த்தே சினிமா கற்றுக்கொண்டுள்ளார்.  இப்போது வரை 320 கோடி உலக அளவில் வசூல் செய்துள்ளது. 

லோகேஷ் அடுத்து விஜய் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்துக்கு லோகேஷ் கனகராஜின் சம்பளம் உயர்ந்துள்ளது. இந்த படத்துக்காக 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்