Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஷாருக் படத்தில் தளபதி 67 டைட்டில் லுக்..! தீயாய் பரவும் தகவல்!

UDHAYA KUMAR Updated:
ஷாருக் படத்தில் தளபதி 67 டைட்டில் லுக்..! தீயாய் பரவும் தகவல்!Representative Image.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படமான தளபதி 67 படத்தின் டைட்டில் லுக் டீஸர் நாளை வெளியாகும் பதான் படத்தின் இடைவேளையில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தளபதி 67ல் விக்ரம்,  பஹத் பாசில், கார்த்தி,  சூர்யா, கமல்  என கோலிவுட்டின் அத்தனை நாயகர்களும் இருப்பதாக பல செய்திகள் உலா வருகின்றன. ஆனால் இவற்றில் எந்த செய்தியும் அதிகாரப்பூர்வமானதாக இல்லை. தற்போது கிடைத்த தகவலின்படி கௌதம் மேனன், மிஷ்கின் இருவரும் படத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் மன்சூர் அலிகானும் படத்தில் இருப்பதாகவும் கொடைக்கானலில் எடுக்கப்படும் காட்சிகள் அவருக்கானது எனவும் வெளியாகும் தகவலும் உண்மைதான் எனுமாறு கூறப்பட்டு வருகிறது. 

இந்த மாதம் 4ம் தேதி சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பு நல்லபடியாக முடிவடைந்து,  அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக கொடைக்கானலுக்கு சென்றிருக்கிறது படக்குழு. இதனைத் தொடர்ந்து காஷ்மீருக்கு செல்கிறார்களாம்.  கொடைக்கானலில் விஜய் நடிக்கும் காட்சிகள் எதுவும் இல்லை என்பதால் அவர் நேரடியாக காஷ்மீருக்கும் வந்துவிடுவார்.  இங்கே மன்சூர் அலிகானுக்கான காட்சிகள் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 இந்நிலையில், நாளை தளபதி 67 படத்தின் டைட்டில் டீசரை வெளியிட இருப்பதாக ஒரு தகவல் இணைய தளத்தில் சுற்றி வருகிறது.  முன்னதாக குடியரசு தின விழா நாளில் தான் வெளியாகும் என கூறப்பட்டது. அதன்பிறகு இப்போது இன்னொரு செய்தியும் பரவி வருகிறது. அதாவது நாளை ஷாருக் நடிப்பில் வெளியாகும் படத்தில் இந்த டைட்டில் லுக் வெளியாகும் என்பது. 

விசாரித்து பார்த்தபோது முதலில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிடப்படும் தளபதி 67 டீசர் பின்னர் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படும் எனவும், ஆனால் ஷாருக்கான் படத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, வழக்கமாக விஜய் படங்களை வாங்கி வெளியிடும் அனைத்து திரையரங்குகளும் தளபதி 67 டைட்டில் லுக்கை வெளியிடும் எனவும் கூறுகிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்