Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Maamanithan 2022 Movie Review: யதார்த்தமான மனிதனின் கதை.... இந்த மாமனிதன்! மனதை உருக்கும் காட்சிகள்.....

Manoj Krishnamoorthi June 24, 2022 & 11:05 [IST]
Maamanithan 2022 Movie Review: யதார்த்தமான மனிதனின் கதை.... இந்த மாமனிதன்! மனதை உருக்கும் காட்சிகள்.....Representative Image.

நம் அன்றாட வாழ்வில் நம் வீட்டில் நம் சுற்றத்தார் என நம் கண்முன்னே நடக்கும் விசயத்தைத்  திரையில் இயக்குநர் சீனு ராமசாமி காண்பித்த திரைப்படமே 'மாமனிதன்' ஆகும். மக்கள் செல்வன் மற்றும் சீனு ராமசாமி கூட்டணியில் இது நான்காவது திரைப்படமாகும், இவர் கூட்டணியில் சென்ற முறை வந்த திரைப்படம் தர்ம துரை தாய் பாசம், காதல் எஅன அனைத்தும் கொண்டு வாழ்வில் வழி தடுமாறிய மனிதனின் கதை யதார்த்தமாகக் காட்சிப்படுத்தினார்.

இவர் கூட்டணியில் யதார்த்தமான  கதையைக் கொண்ட சாமானிய மனிதனின் கதையான மாமனிதன்  (Maamanithan 2022 Movie Review) திரைப்படத்தின் விமர்சனத்தைக் காண்போம்.

கதைக்களம் (Maamanithan Movie Review in Tamil)

பிறருக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் மனசாட்சிக்கு புறம்பாக நடக்காத நல்லவன் வாழ்வில் வஞ்சகர்  சூழ்ச்சியால் தன் குடும்பம் ஊர் என அனைத்தையும் துறக்கும் நிலையில் சிக்கிக் கொள்ளுவது தான் மாமனிதன் திரைப்படத்தின் கதைக்களம் ஆகும். 

திரை பார்வை (Maamanithan 2022 Movie Review)

திரையில் ஆட்டோ டரைவர் ராதாகிருஷ்ணனாக வரும் விஜய் சேதுபதி தன் ஊர் மக்கள் மனதில் நல்ல மனிதன் என்ற பெயரை எடுக்கிறார். அதிகம் படிப்பறிவு இல்லாத ராதாகிருஷ்ணன் ஆட்டோ ஓட்டி தன் வாழ்க்கையை மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இப்படி ஊரில் நல்லவனாக வளம் வரும் ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி)க்கு ஏற்படும் தீராத களங்கம் அவன் வாழ்வில் எப்படி மாற்றுகிறது, அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எப்படி தன்னையும் தன் குடும்பத்தையும் மீட்டு கொள்கிறான் என்பது தான் மாமனிதன் திரைப்படமாகும்.

பிறரின் பொருளுக்கு ஆசைப்படாத நேர்மையான மனிதன் என்று தன் ஆட்டோவில் தொலைத்த நகையை உரியவரிடம் சேர்க்கும் காட்சியிலும் சரி....  காய்த்ரியை திருமணம் செய்ய தன் ஜாதகத்தை வைக்கும் சந்தர்ப்பத்திலும் சரி.... வஞ்சகர் என்று தெரியாமல் அப்பாவி தனமாக சிக்கி கொள்ளும் தருணத்திலும் தன் யதார்த்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார் விஜய் சேதுபதி. 

விஜய் சேதுபதியின் நண்பராக வரும் குரு சோமசுந்தரம் தன் நண்பருக்கு யதார்த்த உலகில் ஒருவன் நண்பனுக்கு ந்ன்ன உதவி செய்வானோ அதை நன்றாக நடித்துக் காட்டியுள்ளார், தன் நண்பனின் சம்பாத்தியத்தை அவன் இல்லாத சமயத்தில் அவன் குடும்பத்துக்கு உதவி செய்யும் தருவாயில் நம்மைக் கவர்கிறார். அன்பனால் இல்லத்தரசி கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் காயத்ரி.      

படத்தின் முக்கிய திருப்புமுனையான தன்னை ஏமாற்றியவரை விஜய் சேதுபதி கண்டுபிடிக்கும்போது தான் ஒரு மனிதன் எப்படி மாமனிதன் ஆகிறான் என்பதை உணர்த்துகிறது. இதை இந்த படத்தின் முலம் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி ஆவார். 

திரைக்கதை- 3.5/5

கதை- 4/5

இசை- 3/5

இயக்கம்- 3.75/5

ஒரு மனிதன் நல்லவன் என்று பெயர் எடுக்க நாளாகும் அந்த பெயரைத் தக்க வைக்க அதிக  கஷ்டம் அதிக கஷ்டப்பட வேண்டும் என்னு கருத்தை ஆளமாக உணர்த்தும்  திரைப்படமாக மாமனிதன் அமைகிறது. 

 இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்