Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,895.44
899.13sensex(1.23%)
நிஃப்டி22,415.30
291.65sensex(1.32%)
USD
81.57
Exclusive

Ponniyin Selvan Review : மெய்சிலிர்க்க வைக்கும் சோழர்களின் பராக்கிரமம்..! திரை விமர்சனம்

Manoj Krishnamoorthi September 30, 2022 & 04:30 [IST]
Ponniyin Selvan Review : மெய்சிலிர்க்க வைக்கும் சோழர்களின் பராக்கிரமம்..! திரை விமர்சனம்Representative Image.

பொன்னியின் செல்வன் எழுத்தாளர் கல்கியின் படைப்பில் புகழ் பெற்ற நாவலாகும். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 1950- 1955 ஆம் ஆண்டு வரை தொடர்கதையாக வெளிவந்தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் நடக்கும் நிகழ்வுகளை உண்மை கதாபாத்திரமும் சில கற்பனை கதாபாத்திரமும் கலந்து வெளிவந்த இந்த வரலாற்று புதினம் எம்.ஜி. ஆர், கமல்ஹாசன் என பலர் கைமாறி இப்போது மணிரத்தினம் வழியாக வெள்ளித்திரையில் ஜோலிக்கிறது.  தமிழ் சினிமாவின் பல நாள் கனவு  'பொன்னியின் செல்வன்'  திரைப்படத்தின் முதல் பாகத்தின் திரை விமர்சனம் கீழே உள்ளது. கல்கியின் கதை திரையில் எப்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பற்றி அறிய வேண்டுமா..! மேலும் இந்த பதிவை பின்தொடரவும்.

Ponniyin Selvan Review : மெய்சிலிர்க்க வைக்கும் சோழர்களின் பராக்கிரமம்..! திரை விமர்சனம்Representative Image

கதாபாத்திரம் (Ponniyin Selvan Cast)

வந்தியத்தேவன்- கார்த்தி

ஆதித்த கரிகாலன்- விக்ரம்

குந்தவை- திரிஷா

அருள்மொழி வர்மன்- ஜெயம் ரவி

நந்தினி- ஐஸ்வர்யா ராய்

சுந்தர சோழன்- பிரகாஷ் ராஜ்

மதுராந்தகன்- ரகுமான்

செம்பியன் மாதேவி- ஜெயசித்ரா

ஆழ்வார்க்கடியான் நம்பி- ஜெயராம்

பெரிய பழுவேட்டரையர்- சரத்குமார்

சின்ன பழுவேட்டரையர்-  ரா. பார்த்திபன்

பெரிய வேளார்- பிரபு

வானதி- சோபிட துலிபாலா

பூங்குழலி- ஐஸ்வர்யா லெக்ஷ்மி

சேந்தன் அழுதன்- அஸ்வின் 

அநிருத்த பிரம்மராயர்- மோகன் ராமன்

ரவிதாசன்- கிஷோர்

பார்த்திபேந்திர பல்லவன்- விக்ரம் பிரபு

மலையமான்- லால்

வீர பாண்டியன்- நாசர்

Ponniyin Selvan Review : மெய்சிலிர்க்க வைக்கும் சோழர்களின் பராக்கிரமம்..! திரை விமர்சனம்Representative Image

கதைக்களம் (Ponniyin Selvan Review In Tamil)

சோழ தேசத்தில் கி.பி 10 ஆம் நூற்றாண்டு நடக்கும் கதையே இந்த பொன்னியின் செல்வன். சோழ தேசத்தின் அரசர் சுந்தர சோழன் மற்றும் சோழ இளவரசி இருவருக்கும் தன் நண்பன் வல்லவரையன் வந்தியத்தேவன் மூலம் ஓலையை  பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் அனுப்புகிறான்.  நண்பனின் ஓலை சுமந்த வந்தியத்தேவனுடன் கதை தன் ஓட்டத்தை பல உட்கதைகளை சுமந்து பயணிக்கிறது.   

Ponniyin Selvan Review : மெய்சிலிர்க்க வைக்கும் சோழர்களின் பராக்கிரமம்..! திரை விமர்சனம்Representative Image

திரை பார்வை (Ponniyin Selvan Review In Tamil)

பண்டைய தமிழும் தமிழனும் எவ்வாறு சிரம் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்கள் என்பதைத் திரையில் கச்சிதமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நிச்சியம் மதிக்கப்பட வேண்டியதாகும். தமிழ் மன்னர்க்குடியில் புகழ்பெற்ற சோழ நாட்டின் சிறப்பை கல்கி எழுத்தில் விரிவுரை கலைநயத்தை  வசனத்தில் உணர்ச்சி பொங்கும் விதமாக ஜெயமோகன் எழுதியுள்ளார். 

சோழ தேசத்தின் பிரமாண்டத்தை இதிகாசம் மறந்தாலும் திரையில் ஆதாவனின் ஓளிபோல பிரகாசமாக ஒவ்வொரு காட்சியிலும் நம்மை சீட் நுணியில் அமர்ந்து பார்க்கும் வண்ணம் திரைப்படத்தை உருவாக்கியதில் மணிரத்தினம் தான் ஒரு லெஜண்ட் என்பது நிரூபித்துள்ளார். 

Ponniyin Selvan Review : மெய்சிலிர்க்க வைக்கும் சோழர்களின் பராக்கிரமம்..! திரை விமர்சனம்Representative Image

வரலாறு மறந்த வீரன் ஆதித்த கரிகாலன் இப்படி தான் இருந்தாரோ என்னும் ஆச்சிரியத்தை விக்ரம் ஏற்படுத்தி இருப்பது அவர் கதை தாகத்தின் உச்சம் ஆகும். சோழ சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றில் பொன் எழுத்தால் பொறிக்கப்பட்ட ராஜராஜ சோழன் கதையின் நாயகன் அருள்மொழி வர்மன்  சோழ தேசத்தின் நன்மைக்காக வாழ்ந்த சேவகன் என்பதை ஜெயம் ரவி திரையில் அருள்மொழி வர்மனாகவே வாழ்ந்திருக்கிறார்.

Ponniyin Selvan Review : மெய்சிலிர்க்க வைக்கும் சோழர்களின் பராக்கிரமம்..! திரை விமர்சனம்Representative Image

நம் தமிழ் நாகரிகத்தில் ஆணுக்கு இணையாக பெண்,  ராஜ்ஜியத்தில் ஆளுமை கொண்டு இருந்தாள் என்பதற்கு உதாரணம் குந்தவை மற்றும் நந்தினி ஆகும். சோழ வம்சத்தை அழிக்கும் முயற்சியில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய்  மற்றும் நந்தினி திட்டத்தை உடைக்கும் குந்தவையாக திரிஷா இருவரும் தங்கள் கதாபாத்திரத்தின் ஆளுமையைத் திறமையாக சுமந்து சென்றுள்ளனர். கதையின் பாரத்தை மொத்தமாக சுமக்கும் கதாபாத்திரமான வந்தியத்தேவனின் குறும்புக்கார நடிப்புக்கு கார்த்தி தன் யதார்த்த நடிப்பில் செந்தமிழ் கொஞ்சி பேசி எழுத்தில் இருந்த வாணர்குலத்து இளவரசன் வந்தியத்தேவனை கண்முன் நிறுத்தியுள்ளார்.

Ponniyin Selvan Review : மெய்சிலிர்க்க வைக்கும் சோழர்களின் பராக்கிரமம்..! திரை விமர்சனம்Representative Image

பண்டைய தமிழன் உடை நாகரிகம் மற்றும் ஆபரணங்கள் என சிறிய விசயத்திலும் கவனமாக ஏகா லக்கானி பயன்படுத்திய கதாபாத்திரங்களுக்கான உடை நமக்கு சோழ தேசத்தின் ஆடை அலங்காரத்தைக் காட்டி உள்ளது.  சோழ நாட்டின் அரண்மனை ஒருவேளை இப்படி தான் இருந்ததோ என்பதுபோல் திரையில் பிரமாண்டமாக  தோட்டா தரணியின் கலை இயக்கம் வெளிப்படுத்தியுள்ளது. 

ஒவ்வொரு காட்சியிலும் தன் தனித்துவமான இசையால் மனதை சோழ நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளார் ஏ. ஆர். ரகுமான். சாமானிய படகு பெண் பூங்குழலி, பழுவேட்டரையர், சம்புவரையர், வேளார் என பல அரசுகளை நினைவூட்டியுள்ளது "பொன்னியின் செல்வன்".

கதை- 4/ 5

திரைக்கதை- 4/ 5

வசனம்- 4/ 5

இசை- 4/ 5

இயக்கம்- 4/ 5

அரண்மனையில் தீட்டும் சதி போர்களத்தில் நடக்கும் யுத்தமும் சோழனின் பரக்கரமத்தை இவ்வுலகிற்கு வெளிக்காட்டியதில் மணிரத்தினத்தின் "பொன்னியின் செல்வன் பாகம்1" திரைப்படத்திற்கு முக்கிய பங்கு இருக்கும். நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட பிரம்மாண்டத்தை திரைக்கதையில் சிறப்பாக


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்