Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புதிய லுக்கில் வடிவேலு.. மிரட்டலான நடிப்பில் உதயநிதி..! - வெளியானது மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர்!

Chandrasekaran Updated:
புதிய லுக்கில் வடிவேலு.. மிரட்டலான நடிப்பில் உதயநிதி..! - வெளியானது மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர்! Representative Image.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிக்கும் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் மாரி செல்வராஜ். தலித் மக்களின் வாழ்வியலை அழகியலோடு தமிழ் சினிமாவில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். தற்போது வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் மாமன்னன் எனும் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. வடிவேலு குரலோடு ட்ரெய்லர் தொடங்கி வேகமெடுக்கிறது. கொங்கு பகுதியில் தலித் மக்கள் மீதான வன்முறையை பேசுவதுபோல ட்ரெய்லர் அமைக்கப்பட்டுள்ளது.

ட்ரெய்லர் முழுக்க வடிவேலு மட்டுமே நிறைந்திருக்கிறார். புதிய லுக்கில் வடிவேலுவை பார்ப்பதற்கே புதுமையாக உள்ளது. அவரது உடல்மொழி, பேச்சு, பார்வை, உடை என அனைத்தும் மாறி புதிய பரிணாமத்தில் வடிவேலு தெரிகிறார். ட்ரெய்லரில் வரும் வசனங்களும் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் உள்ளது. நெஞ்சுக்கு நீதி போல இந்த படத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிப்புக்கு நல்ல ஸ்கோப் இருப்பது உள்ளது. கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் உள்ளிட்டோர், இதுவரையில் பார்க்காத கோணத்தில் நடித்திருப்பது தெரிகிறது.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டலான பின்னணி இசையும் மனதை ரணமாக்கும் விதத்தில் உள்ளது. மொத்தத்தில் மாரி செல்வராஜ் பாணியில் மற்றொரு சமூக நீதி பேசும் படமாக இருக்கும். படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள், சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்