Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. | LEO First Single Naa Ready

Nandhinipriya Ganeshan Updated:
விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. | LEO First Single Naa ReadyRepresentative Image.

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய முதல் படமே ஹிட் அடித்த நிலையில், நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் மரண ஹிட். அதன்பிறகு தளபதி விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கினார். இவர் எடுத்த நான்கு படங்களுமே பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அதுமட்டுமல்லாமல், லோகேஷ் இயக்கிய படமென்றால் இப்படி தான் இருக்கும் என்று இவருக்கு ஒரு தனி அடையாளத்தையே கொடுத்துவிட்டனர் நம்ம ரசிகர் பெருமக்கள். 

அடுத்தது இவர் படம் எடுக்கமாட்டாரா? அந்த படத்தில் யார் ஹூரோ? என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. அந்தவகையில், தளபதி விஜயை வைத்து மீண்டும் 'லியோ' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன.

இந்த கூட்டணியில் ஒரு திரைப்படம் வருகிறது என்றதுமே நாளுக்கு நாள் பல அப்டேட்களை கொடுத்த வண்ணம் இருக்கிறார் லோகேஷ். அந்தவகையில், தற்போது படத்தை பற்றிய ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான 'நா ரெடி...' பாடலை வெளியிடுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது படத்தில் வரும் முதல் பாடலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பாடலை விஜய் தானே பாடியிருக்கிறாரா? என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், ஜூன் 22 ஆம் தேதி இந்த பாடல் பெரிய அளவில் வைரலாகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. | LEO First Single Naa ReadyRepresentative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்