Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mahaan Deleted Scenes: மகான் படத்தில் மிஸ் ஆன காட்சிகள்...!! விக்ரமுடன் ரொமான்ஸ் செய்யும் வாணி போஜன்...!

Nandhinipriya Ganeshan May 21, 2022 & 13:50 [IST]
Mahaan Deleted Scenes: மகான் படத்தில் மிஸ் ஆன காட்சிகள்...!! விக்ரமுடன் ரொமான்ஸ் செய்யும் வாணி போஜன்...!Representative Image.

Mahaan Deleted Scenes: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மூலம் லலித் குமார் தயாரித்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியத்தில், நடிகர் சியான் விக்ரமின் 60 வது படமாக "மகான்" திரைப்படம் உருவாகியிருந்தது. இந்த படத்தில், விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர். பாபி சிம்ஹா, சிம்ரன், ஆடுகளம் நரேன், சனந்த், முத்துக்குமார் மற்றும் தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்த கேங்க்ஸ்டர் நாடகம் மகான். 

தமிழ்நாட்டின் சாராய சாம்ராஜ்யத்தின் ராஜாவாகத் திகழும் டீட்டோடல்லரின் மகனான காந்தி மகானின் பயணத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவானது. அவரது போராட்டங்கள், சவால்கள் மற்றும் அவரது வாழ்க்கையில் அவர் தழுவிய சட்டவிரோத பாதை ஆகியவை கதையின் மையமாக அமைகின்றன. 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்தில், சேதுபதி புகழ் இளம் நடிகர் மாஸ்டர் ராகவனும் நடித்திருந்தார். 3 வருடங்கள் கழித்து விக்ரம் படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பெரிய வெற்றி படமாக இந்த படம் அவதரித்துள்ளது.

மேலும், இப்படத்தில் வாணி போஜன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணத்தால் அவரது பகுதிகளின் படப்பிடிப்பை முடிக்க முடியவில்லையாம். இதனால், விக்ரம் மற்றும் வாணி போஜன் (Vikram & Vani Bhojan Deleted Scenes) சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டது. இதனால், படம் பார்த்த அனைவருமே ஏமாற்றத்தில் இருந்தனர். தற்போது, மகான் படத்தின் 100வது நாளை கொண்டாடும் விதத்தில், படத்தின் தயாரிப்பாளர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட மூன்று காட்சிகளை வெளியிட்டுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Deleted Loneliness: முதல் காட்சி காந்திக்கும் (விக்ரம்) மங்கைக்கும் (வாணி) இடையேயான உறவைச் சுற்றி வருகிறது. 

Deleted Curse: இரண்டாவது காட்சி, மதுபான ஆலையில் நடந்த போராட்டத்தைப் பற்றியது, அங்கு ஒரு வயதான பெண் சத்தியவானை (பாபி சிம்ஹா) திட்டுவது போன்ற காட்சி.

Deleted kin: கடைசிக் காட்சி தாதாபாய் நௌரோஜிக்கும் (துருவ் விக்ரம்) ஞானத்தின் மகனுக்கும் இடையே நடக்கும் உரையாடலைப் பற்றியது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே  க்ளிக்  செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்