Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பேன்ஸ்க்கு செம்ம விருந்து வைத்த மார்வெல்ஸ்.....! அப்டேட்டுகளால் திக்குமுக்காடிய ரசிகர்கள்..!

madhankumar July 27, 2022 & 13:24 [IST]
பேன்ஸ்க்கு செம்ம விருந்து வைத்த மார்வெல்ஸ்.....! அப்டேட்டுகளால் திக்குமுக்காடிய ரசிகர்கள்..!Representative Image.

மார்வெல்ஸ் நிறுவனம் காமிக்ஸை அடிப்படையாக கொண்டு பல்வேறு படங்களை எடுத்து வருகிறது. தனக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மார்வெல்ஸ் படங்களின் ரசிகர்களாக இருந்துவருகின்றன. 

தற்போதுவரை பல்வேறு படங்கள் மார்வெல்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளன. அயன் மேன், கேப்டன் அமெரிக்க, ஸ்பைடர் மேன், ஆண்ட் மேன், ஹல்க், ஸ்கார்லெட் விட்ச், ஹாவ்கி, ப்ளாக் விடோ, வார் மெஷின், வின்டர் சோல்ஜர், விஷன், பிளாக் பாந்தர், ஷாங்க்ஷி, தோர்,  லோகி, தேனொஸ், கார்டியன்ஸ் ஆப் கேலக்சி, என எண்ணில் அடங்க பல்வேறு கதாபாத்திரங்களை கொண்டு பல்வேறு படங்களை கொடுத்துள்ளனர்.

தற்போதுவரை இந்த மார்வெல்ஸ் படங்களில் 4 பேஸ் வரை படங்கள் வந்துள்ளது, இந்த ஆண்டு முதல் பேஸ் 4 முடிவடையவுள்ளது, wakanda forever தான் பேஸ் 4 இல் கடைசி படமாகும். இதனையடுத்து பேஸ்5 பேஸ்6ல் அடுத்தடுத்து பல்வேறு அப்டேட்டுகளை மார்வெல்ஸ் வழங்கியுள்ளது. அவை, 

பேஸ் 5 (PHASE 5):

சமீபத்தில் நடந்த காமிக் கான் 2022இல் மார்வெல்ஸ் நிறுவனம் பேஸ் 5 மற்றும் பேஸ் 6 ஆகியவற்றில் வெளியாகவுள்ள பாடங்களை அறிவித்துள்ளது. அதில் முதலாவதாக ஆண்ட் மேன் அண்ட் வாஸ்ப் க்வாண்டமேனியா (பிப் 17, 2023), சீக்ரட் இன்வேஷன் தொடர் (2023), கார்டியன்ஸ் ஆப் கேலக்சி VOL.3 (மே 5 2023), மேலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக கூடிய மார்வெல் இணைய தொடர்கள், 

"எக்கோ" மற்றும் "லோகி" சீசன் 2, இரண்டும் 2023 ஆம் ஆண்டு கோடையில் வெளியாக உள்ளன. மேலும் "அயர்ன்ஹார்ட்" 2023 வெளியாக உள்ளது  அதே நேரத்தில் "அகதா: கோவன் ஆஃப் கேயாஸ்," என்ற தொடரும் 2023இல் வெளியாகவுள்ளது. மேலும் மிக முக்கிய அப்டேட்டாக பார்க்கப்படுவது "டேர் டெவில் பார்ன் அகேன்" இதுதான் மார்வெல் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் அதிக எபிசோட்களை கொண்ட தொடர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மொத்தமாக 18 எபிசோட்களாக இது வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பேஸ் 5வில் வெளியாகவிருக்கும் படங்கள், "தி மார்வெல்ஸ்" July 28, 2023 அன்று வெளியாகவுள்ளது. அடுத்ததாக "பிளேட்" Nov. 3, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக "கேப்டன் அமெரிக்கா: நியூ வேர்ல்ட் ஆர்டர்" படம் May 3, 2024 அன்று வெளியாக உள்ளது. மேலும்  "தண்டர்போல்ட்" படம் July 26, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பேஸ் 6 (PHASE 6):

மார்வெல்ஸ் இந்த பேஸ் 6 வரிசையில் மொத்தம் 3 படங்களை மட்டும் தற்போது அறிவித்துள்ளது, அவற்றில் "ஃபெண்டாஸ்டிக் 4" படம் Nov. 8, 2024 அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அவெஞ்சர்ஸ் படங்கள் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அவற்றில் "அவெஞ்சர்ஸ்: தி காங் டைனஸ்டி" மற்றும் "அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ்" ஆகிய இரண்டும் மே 2 மற்றும் நவம்பர் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பேஸ் 6இல் கம்மியான படங்கள் மட்டும் இருக்கிறது என்று கூறப்படும் நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் D23யில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. 

அனிமேஷன் தொடர்கள்:

அடுத்து அனிமேஷன் இணைய தொடர்களும் வெளியாகவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த வகையில், "எக்ஸ்-மேன் '97" 2023 அன்றும் "வாட் ஃஇப்" தொடரின் இரண்டாம் பாகம் 2023ன் தொடக்கத்திலும், "மார்வெல் ஜாம்பிஸ்" வாட் ஃஇப் தொடரின் ஒரு எபிசோடில் இருந்து உருவான இதனை தனி தொடராக 2023 ஆண்டில் வெளியிடப்பட உள்ளது. அடுத்ததாக, மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சில் முதன் முறையாக இணைந்த டாம் ஹொலண்ட் ஸ்பைடர் மேன் தனக்கு சக்தி கிடைத்த தொடக்க காலகட்டத்தில் என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தார் என்பது குறித்து Spider-Man: Freshman Year என்ற தலைப்பில் இளைய தொடர் ஒன்று 2024இல் டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டரில் வெளியாகவுள்ளது. அடுத்து "ஐ அம் க்ருட்" என்ற அனிமேஷன் தொடர் இந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று டிஸ்னி பிளசில் வெளியாகவுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகள் மார்வெல் ரசிகர்களுக்கு திருவிழாதான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்