Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mouna Ragam 2: நீ சொல்ல மாட்டிய...அப்ப நான் சொல்றேன்...சக்தியிடம் மாட்டிக்கிட்டு பதறிய ஸ்ருதி...!

Priyanka Hochumin October 19, 2022 & 13:00 [IST]
Mouna Ragam 2: நீ சொல்ல மாட்டிய...அப்ப நான் சொல்றேன்...சக்தியிடம் மாட்டிக்கிட்டு பதறிய ஸ்ருதி...!Representative Image.

Mouna Ragam 2: நான் கர்பமா இருக்கேன்னு சொல்லி எல்லாத்தையும் ஏமாத்துன ஸ்ருதியின் வண்டவாளத்தை தெரிந்து அவளை வெளுத்து வாங்கிய சக்தி. இன்னைக்கு சம்பவம் இருக்கு!

ஸ்ருதி கர்பமாவே இல்லன்னு தெரிஞ்சதும் அந்த பொய்ல இருந்து அவள காப்பாத்த, ஸ்ருதி குடும்பம் சக்தி மேல பலிய தூக்கி போட்டுட்டாங்க. இதுனால எல்லாருமே சக்தி மேல கோவத்துல இருக்காங்க. ஆனா ஸ்ருதி அபாஷன் ஆனதுக்கு அப்புறம் எந்த கவலையும் இல்லாம ரூம்ல குத்தாட்டம் போட்டுட்டு இருக்குறத வேலைக்காரம்மா பாத்துட்டு சொன்னாங்க. அதுல சக்திக்கு வந்த சந்தேகத்தால ஸ்ருதி ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டா ஹாஸ்பிடல்  போய் நடந்தத தெரிஞ்சிக்கிறாள். அந்த கோவத்துல வீட்டுக்கு வந்த சக்தி, நேரா ஸ்ருதி ரூம்க்கு போய் சும்மா லெஃப்ட், ரைட்டு வாங்குறா.

நீயெல்லாம் ஒரு மனிசியா இந்த மாறி விஷயத்துல பொய் சொல்ற. நீயும் உன்னோட குடும்பமும் சேர்ந்த எனக்கு இப்படி ஒரு பட்டம் கட்டிடீங்க. நானும் ஒரு சிசு இறந்ததுக்கு காரணமாகிட்டேன்னு நொந்து போனேன். ஆனா நீ எல்லாம் தெரிஞ்சும் எதுவுமே தெரியாத மாறி இருந்தெல்லாம். இதை எல்லாத்துகிட்டயும் சொல்ல எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஆனா அப்பா, மாமா கௌரவத்துக்காக சொல்லமாட்டேன். இத உங்கிட்ட கூட சொல்ல வேணாம்னு தான் இருந்தேன், ஆனா நான் இத்தனை நாளா துடிச்சிட்டு இருந்தேன்ல. இனிமே நீ அப்படி இருக்கனும் அதுக்கு தான் சொன்னேன்னு சொல்லிட்டு போயிட்டா சக்தி.

இதை தெரிஞ்சிகிட்ட வருண், சக்திகிட்ட போய் ஏன் ஒரு மாறி இருக்கேனு கேக்குறான். ஆனா சக்தி எதுவும் சொல்லல, இருந்தாலும் பொண்டாட்டிய கஷ்ட படுத்துன ஸ்ருதிய சும்மா விட கூடாதுன்னு வருண் ஏதோ பிளான் பண்றான். அடுத்து என்ன நடக்கும்னு பாக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்