Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

நாளை முழுக்க விஜய் படங்கள்தான்.. விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு

Aruvi Updated:
நாளை முழுக்க விஜய் படங்கள்தான்.. விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்குRepresentative Image.

சென்னை: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரோஹினி, கமலா திரையரங்குகலில் நாளை முழுவதும் விஜய் திரைப்படஙக்ள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசு படத்துக்கு கலவையான விமர்சனம் விஜய்க்கு ரொம்பவே அப்செட் என கூறப்படுகிறது. எனவே கட்டாயம்  ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். எனவே அந்த இரண்டு படங்களிலும் விட்டதை பிடிக்க லியோ படத்தை நம்பியிருக்கிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் திரை நட்சத்திரங்கள் பலர் களமிறங்கியிருக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் பிஸ்னெஸ்ஸும் இதுவரை 400 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

விஜய் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி லியோ படத்தில் இடம்பெற்றிருக்கும் நா ரெடி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதுதொடர்பான ப்ரோமோவும் வெளியாகியிருக்கிறது. விஜய் பாடியிருக்கும் அந்தப் பாடலின் நான்கு வரிகளை கேட்ட ரசிகர்கள் அதனை கொண்டாடிவருகின்றனர். மேலும் இது எல்சியூவில் வருவது உறுதி என்றும் ஆரூடம் கூறிவருகின்றனர்.

பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாவதோடு அப்டேட்டுகள் நின்றுவிடுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. அதனை போக்கும் விதமாக லோகேஷ் கனகராஜ் இன்று மாலை ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் அறிவித்து ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருக்கிறார்.

இப்படி ஒருபக்கம் விஜய் ரசிகர்களுக்கு லியோ படக்குழு ட்ரீட் கொடுக்க மறுபக்கம் திரையரங்குகளும் ட்ரீட் கொடுக்க தயாராகி இருக்கின்றன.அதன்படி, பல திரையரங்குகளில் நாளை விஜய் பிறந்தநாள் என்பதால் அவர் நடித்த திருமலை, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி, மெர்சல், பிகில், மாஸ்டர் உள்லிட்ட படங்கள் சிறப்பு காட்சிகளாக திரையிடப்படவிருக்கின்றன.

அதேபோல் சென்னையில் பிரபல திரையரங்குகளாக விளங்கும் கமலா மற்றும் ரோஹினி திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் விஜய்யின் திரைப்படங்களை திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்