Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yuvan get doctor award : போதை கொடுத்தே டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Manoj Krishnamoorthi September 03, 2022 & 18:00 [IST]
Yuvan get doctor award : போதை கொடுத்தே டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜா  ரசிகர்கள் கொண்டாட்டம்..!Representative Image.

தன் இசையால் ரசிகரின் மனதில் ஆழ்ந்த இடத்தை கொண்டுள்ள  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு, இன்று 3.09.2022 (சனிக்கிழமை)  கௌரவ பட்டம் அளித்து மரியாதை அளிக்கபட்டது. அது என்ன கௌரவ மரியாதை என்பதை அறிய வேண்டுமா... மேலும் படிக்கவும்.

யுவன் சங்கர் ராஜா- இசை போதை  

இசை நம் மனதிற்கு நெருக்கமான ஒன்றாகும், மனிதன் பரிணாம வளர்ச்சி கொள்ளும் காலம் முதல் அவனுடன் இசை வாழ்ந்து கொண்டு இருந்த்து. சந்தோஷம், கவலை, கோபம், ஏக்கம், கொண்டாட்டம், பக்தி, அமைதி என அனைத்து சூழலில் இசை மனிதனுடன் பின்னி பினைந்து  வாழ்ந்து கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமாவில் அனைத்து ஜார்னிலும் கொடிகட்டி தன் இசையால் ரசிகர் மனதில் நிலைத்து நிற்கும் ஒரே இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான். 

1996 ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த அரவிந்தன் என்னும் திரைப்படத்தில் தன் 16 வயதில் அறிமுகமாகி தன் இசையால் தனக்கென தனிப்பாணியை உருவாக்கி கொண்டார். ரசிகர்களால் "கிங் ஆப் பிஜிஎம் (King OF BGM) என்று சொல்லும் வகையில் ஒவ்வொரு படத்திலும் தன் இசையால் மெய்சிலர்க்கும் இசைகொடுத்து, இவரின் இசை இசை அல்ல போதை என ரசிகரால் சொல்லும் வகையில் இருந்தது. இவ்வாறு தமிழ் மட்டுமில்லாமல் பல மொழிகளில் இசையமைத்து 25 வருடத்தில் மாபெரும் சாதனை படைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

எங்கு வழங்கப்பட்டது?

இன்று (3.09.2022, சனிக்கிழமை) செம்மஞ்சேரி சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில்  2258 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.  இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் திரு, சதீஷ் ரெட்டி அவர்கள் பட்டங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்திய திரைத்துறையில் பல மொழிகளில் தன் தனித்துவமான இசையால் சாதனை படைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் (Sathyabama University Gives Yuvan Doctorate Award) வழங்கப்பட்டது. 

யுவனுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக யுவனின் ரசிகர் ஆனந்த கொண்டாட்டத்தில் உள்ளனர், சமூக வலைத்தளத்தில் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொள்கின்றனர். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: யுவன் டாக்டர் பட்டம் 2022 | Sathyabama University Gives Yuvan Doctorate Award | Yuvan Get Doctor Award | Yuvan Doctor Award 2022 | Yuvan Sathyabama Gets Doctor Award | Sathyabama University  Gives Yuvan  Doctor Award

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்