Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோப்ரா தோல்விக்கு இதுதான் காரணமா?

UDHAYAKUMAR September 01, 2022 & 19:00 [IST]
கோப்ரா தோல்விக்கு இதுதான் காரணமா? Representative Image.

விக்ரம் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் கோப்ரா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாது என கூறப்படுகிறது. அதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. 

சீயான் விக்ரம் நடிப்பில் 3 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் திரையரங்கில் ரிலீஸாகப் போகிறது என்பதை முன்னிட்டு, ரசிகர்கள் ஆரவாரத்துடன் முதல் நாள் காட்சியைக் காண ஆர்வமாக திரையரங்குகளில் முண்டியடித்துக்கொண்டனர். உள்ளே சென்று படம் பார்த்தவர்களுக்கு எகிறிய பல்ஸ், படத்தின் பர்ஸ்ட் ஆஃப் முடியும் தருவாய் வரை அணையாமல் பார்த்துக் கொண்டது படம். ஆனால் பிற்பகுதியில் அணைந்து உலுத்து காய்ந்து கரியாய் போகாத குறைதான். 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா திரைப்படம் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதுதான் தவறு என்கிறார்கள் சினிமா வியாபாரம் அறிந்தவர்கள். பொதுவாக வெள்ளிக்கிழமை படம் வருகிறது என்பது, ராசியான நாள் என்பதற்காக அல்ல. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறையில் படம் தப்பிக்கும் என்பதால்தான். 

இப்போது புதன்கிழமை படத்தை ரிலீஸ் செய்திருப்பதால், அன்றைய தினமே மோசமான விமர்சனத்தால் பாதிக்கப்பட்டது கோப்ரா. அடுத்து வியாழக்கிழமை பெரும்பாலும் யாரும் தியேட்டர் பக்கம் போகவில்லை. இதனால் 6 லிருந்து 7 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது கோப்ரா. 

மற்ற நடிகர்களின் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ முதல்நாளே 25 கோடி வசூல் என போடுவார்கள். ஆனால் சராசரியாக 15 கோடியாவது வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா படம், அதனைவிட மோசமான வரவேற்பை பெற்றுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்