Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல இசையமைப்பாளரின் தாயார் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!!

Sekar September 12, 2022 & 11:52 [IST]
பிரபல இசையமைப்பாளரின் தாயார் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!!Representative Image.

பிரபல திரைப்பட இசையமைப்பாளரான மணிசர்மாவின் தாயார் சரஸ்வதி 88 வயதில் உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். 

1992'ல் ராம்கோபால் வர்மா இயக்கிய ராத்ரி எனும் இந்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான மணிசர்மா, தொடர்ந்து ராம்கோபால் வர்மா இயக்கியா அந்தம் படத்துக்கும் இசையமைத்தார். 

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ள அவர், 2001'ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான நரசிம்மா படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அடுத்து விஜய் நடித்த ஷாஜகான் படத்துக்கு இவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் ஹிட்டடித்தன. 

மேலும், யூத், ஆசை ஆசையாய், அரசு, அலாவுதீன், ஆஞ்சநேயா, கம்பீரம், மலைக்கோட்டை, ஆர்யா என தொடர்ந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த மணிசர்மாவின் தாயார் சரஸ்வதி, சென்னையில் உள்ள மணிசர்மாவின் சகோதரர் ராமகிருஷ்ணாவின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், நேற்று மாலை அவர் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் மணிசர்மாவின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்