Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹாலிவுட் போனதால காண்டா..? மீண்டும் சிம்பு-தனுஷ் மோதல்!!

Sekar September 17, 2022 & 13:40 [IST]
ஹாலிவுட் போனதால காண்டா..? மீண்டும் சிம்பு-தனுஷ் மோதல்!!Representative Image.

ஹாலிவுட் போய்விட்டால் பெரிய ஆளா? பெரிய ஆளுன்னா என்ன? என்பது குறித்து நடிகர் சிம்பு பேட்டியளித்துள் நிலையில், இது தனுஷை குறிவைத்து பேசப்பட்டதாக தனுஷ் ரசிகர்கள் கொதிக்க, மீண்டும் சிம்பு-தனுஷ் மோதல் வெடிக்க ஆரம்பித்து விட்டதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

என்னதான் இருவரும் சாதாரணமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், இருவரும் வெளிப்படையாககே வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இது அடங்கிய நிலையில், தனுஷ் மிகப்பெரும் நடிகராக மாறி, ஹாலிவுட் வரை போய்விட்டார்.

மறுபுறம் சிம்பு வெற்றிப் படத்தை கொடுக்க போராடி வந்து, கடைசியாக மாநாடு மூலம் திரும்ப கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது அவரது வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவர் கூறிய ஒரு கருத்தை வைத்து சிம்பு-தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் வார்த்தைப்போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு யூடியூப் பேட்டியில் நடிகர் சிம்பு, "யார் பெரிய ஆள்? ஒரு பேச்சுக்கு நான் ஹாலிவுட்டில் நடிச்சிட்டேன்னு வச்சுக்கோங்க, அடுத்து என்ன என்று தொடர்ந்து ஓடத்தான் செய்வோம். என்னைப்  பொருத்தவரை யார் தனது வேலையை சரியாக செய்கிறார்களோ அவர்கள் தான் பெரிய ஆள்" எனத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பேட்டியில் மேலும், "இப்போது நான் சைக்கிள் வாங்கியுள்ளேன். ஆனால் மோட்டார் சைக்கிளை பார்க்கும்போது சைக்கிள் சிறிதாக தெரியும். அதேபோல் காருடன் மோட்டார் சைக்கிள் சிறிதாக தெரியும். இதை நான் சிறு வயதிலேயே புரிந்துகொண்டேன்." எனக் கூறியுள்ளார்.

அவரது இந்த பேட்டியை வெட்டி, ஒட்டி பரப்ப, தனுஷ் மீதான காழ்ப்புணர்ச்சியை தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று தனுஷ் ரசிகர்களும், பேட்டியை முழுசாக பாருங்கள் என சிம்பு ரசிகர்களும் மோதிக் கொள்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்