முத்தழகு சீரியல்: கடந்த நவம்பர் 15, 2021 லிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் முத்தழகு. ஏழை பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பணக்கார பையன் வந்தால் என்ன நடக்கும் என்பதை மையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியலில் ஆஷிஷ் சக்ரவர்த்தி (பூமிநாதன்) மற்றும் ஷோபனா (முத்தழகு) இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், வைஷாலி தனிகா, லட்சுமி வாசுதேவன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்து வருகின்றனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 03.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலின் நடிகை, நடிகர்களின் உண்மையான பெயர், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.
முத்தழகு சீரியல் நடிகை, நடிகர்கள்:
உண்மையான பெயர் [Real Name] |
கதாபாத்திரத்தின் பெயர் [Character Name] |
ஷோபனா |
முத்தழகு பூமிநாதன் (2வது மனைவி) |
ஆஷிஷ் சக்ரவர்த்தி |
பூமிநாதன் |
வைசாலி தனிகா |
அஞ்சலி பூமிநாதன் (முதல் மனைவி) |
லட்சுமி வாசுதேவன் |
பேச்சியம்மாள் வீரமுத்து |
ஷாலினி ராஜன் |
தமிழ் |
சுர்ஜித் அன்சாரி |
மருது |
தீபா நேத்ரன் |
சொர்ணம் |
ஆனந்த பாபு |
வீரமுத்து |
ராஜ்மோகன் |
சிவநேசன் |
ரேகா சுரேஷ் |
பாண்டியம்மாள் |
சாந்தி |
திலகா |
தக்ஷனா |
தங்கம் |
கணேஷ் |
மலைசாமி |
மகேஷ் சுப்ரமணியம் |
அமுதன் |
சைலு இம்ரான் |
செண்பகம் |
சம்யுதா |
ஸ்வேதா |
கார்த்திக் ஸ்ரீராம் |
செந்தில் |
சந்துரு |
விமல் |
முத்தழகு சீரியல் முழு விவரம்:
சீரியல் பெயர் |
முத்தழகு |
சேனல் |
ஸ்டார் விஜய் டிவி |
ரிலீஸ் தேதி |
15 நவம்பர் 2021 |
ஒளிப்பரப்பு நேரம் |
03.30 PM - 04.00 PM [22-24 நிமிடங்கள்] |
ஒளிப்பரப்பாகும் நாள் |
திங்கள் முதல் சனி வரை |
இயக்குநர் |
தமிழன் நாகராஜன் |
தயாரிப்பாளர் |
பிரபாகரன் விஜயகுமார் |
எழுத்து |
எஸ்.எம்.மதுமிதா |
எடிட்டிங் |
- |
ஒளிப்பதிவு |
- |
திரைக்கதை |
- |
இசையமைப்பாளர் |
ஜேம்ஸ் வசந்த் |
தயாரிப்பு நிறுவனம் |
பால்கன் தொலைக்காட்சி ஊடகம் |
ஓடிடி தளம் |
டிஸ்னி+ஹாட்ஸ்டார் |
முத்தழகு சீரியலின் கதை..
ஏழையாக இருந்தாலும் தைரியமான கிராமத்து இளம் பெண்ணாக வருகிறாள் முத்தழகு. தன்னுடைய தந்தை மாற்றாந்தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் கிராமத்தில் வசித்து வரும் முத்தழகு, வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கிறாள். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், தன் கனவுகளை தியாகம் செய்து தன் குடும்பத்தின் பொறுப்புகளை சுமக்கிறாள். இந்த சமயத்தில் தான், பணக்கார பையனான பூமிநாதன் முத்தழகுவை சந்திக்கிறான். பூமிநாதனின் அம்மா (பேச்சியம்மாள் வீரமுத்து) முத்தழகுவின் வாழ்க்கையைப் பற்றி பயப்பட்டாலும், அவளுடைய தைரியத்தை பாராட்டுகிறாள். அதனால், முத்தழகுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த பேச்சியம்மாள், தன் மகன் பூமிநாதனுக்கு முத்தழகுவை திருமணம் செய்து வைக்கிறாள். இருப்பினும், முத்தழகு மற்றும் பூமிநாதன் இருவடைய வாழ்க்கை முறையும் குறிக்கோளும் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கிறது.
கருத்துவேறுபாடு இருந்தபோதிலும், இந்த இளம் ஜோடி தங்களது வாழ்க்கையை தொடர்கின்றனர். பின்னர், அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்குள் காதலும் மலர்கிறது. இந்தநிலையில், பூமிநாதனின் முன்னாள் காதலியான அஞ்சலி உயிருடன் இருப்பது தெரியவருகிறது. அதாவது, பூமிநாதன் கல்லூரி படிக்கும்போதே அஞ்சலியை காதலித்து வந்துள்ளனர். பின்னர் ஒருக்கட்டத்தில் இருவரும் ரகசியமாக திருமணமும் செய்துக் கொள்கின்றனர். தற்போது அஞ்சலி மீண்டும் பூமிநாதனின் வாழ்க்கைக்குள் வரும்போது முத்தழகு எம்மாதிரியான சவால்களை சந்திக்கப்போகிறாள், பூமிநாதன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தான் கதைக்களம்.
முத்தழகு சீரியல் இன்றைய எபிசோட்
முத்தழகு சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, விஜய் டிவி வெளியிடும் முத்தழகு சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…