Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,917.31
268.69sensex(0.36%)
நிஃப்டி22,409.95
73.55sensex(0.33%)
USD
81.57
Exclusive

பொன்னி சீரியல் டுடே எபிசோட், ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Vijay TV Ponni Serial

Gowthami Subramani Updated:
பொன்னி சீரியல் டுடே எபிசோட், ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Vijay TV Ponni SerialRepresentative Image.

இணைபிரியாத இரு நண்பர்கள், உறவினர்களாக மாறும் கதையை எடுத்துக் கூறுவதாகவே இந்த பொன்னி சீரியல் கதை அமைகிறது. இதில், பொன்னியின் தந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், அவரைக் காப்பாற்ற பொன்னி தன் வாழ்க்கையைத் தானம் செய்யத் துணிகிறாள். இதிலிருந்து மீட்டு,  பொன்னி தந்தையின் நண்பன் மற்றும் அவரது மகன் அதாவது பொன்னியின் சிறுவயது நண்பனும் உதவுகின்றனர். இந்த விறுவிறுப்பான சீரியலில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள், சீரியல் ஒளிபரப்பாகும் நேரம், ஓடிடி தளம், மற்றும் பொன்னி சீரியல் கதையைக் காணலாம்.

பொன்னி சீரியல் விவரங்கள்

பொன்னி சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் பெயர்

பொன்னி

வகை

நாடகம்

சேனல்

விஜய் டிவி

வெளியீடு

27 மார்ச் 2023 -
தற்போது

இயங்கும் நேரம்

20-22 நிமிடங்கள்

நாள்

திங்கள் முதல் சனி வரை

நேரம்

02:30 PM- 03:00 PM

எழுதியவர்

ஸ்ரீதர் K.A. விஜயன்

உரையாடல்

சிவராம் குமார்

திரைக்கதை

ஸ்ரீதர் K.A. விஜயன்

இயக்கம்

மனோஜ் குமார்

தயாரிப்பாளர்

சிவகாந்த்

தொகுப்பாளர்

தமிழ்செல்வன்

நெட்வொர்க்

ஸ்டார் விஜய்

 

பொன்னி சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்

இதில், பொன்னி சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.

உண்மையான பெயர்

கதாபாத்திர பெயர்

வைஷூ சுந்தர்

பொன்னி

சபரிநாதன்

சக்திவேல்

ஷமிதா ஸ்ரீகுமார்

ஜெயலட்சுமி

சூப்பர்குட் கண்ணன்

சந்திரசேகர்

வருண் உதாய்

சுந்தரம்

கார்த்திக் சசிதரன்

சண்முகம்

ஸ்ரீதேவி அசோக்

உஷா

யுவன்ராஜ் நேத்ருன்

மூர்த்தி

ஈஸ்வரி ரகுநாதன்

-

பார்கவி ஈஸ்வரமூர்த்தி

-

ஷியா

வெண்ணிலா

தர்ஷிகா

ப்ரீத்தி

அழகு

முத்தையா

ஜெயஸ்ரீ பினுராஜ்

விஜயா

சேது சுப்பு

வைத்தியலிங்கம்

வேதாஸ்யா

குழந்தை ஷிவானி

ஜனனே பிரபு

பவானி

 

விஜய் டிவி சீரியல் பொன்னி கதை

பொன்னி சீரியலின் முக்கிய கதாபாத்திரமாக விளங்குபவர் பொன்னி. இவரின் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், பொன்னி தனது வாழ்க்கையைப் பணயம் வைத்து, வட்டிக்கு விடும் நபரிடம் பணம் வாங்கி, அவரைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார். இந்நிலையில், பொன்னி தந்தையின் நெருங்கிய நண்பரும், அவரது மகன் சக்தியும் பொன்னியின் திருமணத்தைக் காண ஊருக்கு வருகின்றனர். இந்நிலையில், பொன்னியின் நிலையைக் கேட்ட சக்தியும், அவரது தந்தையும், வாங்கிய பணத்தைக் கொடுத்து நிறைய பிரச்சனைகளுக்கு இடையில் பொன்னியை மீட்டு அவர்களது வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர்.

ஜெயலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷமிதா, சக்தியின் தாய் ஆவார். இவர், தனது வீட்டிற்கு அவரது அண்ணன் மகள் வெண்ணிலா தான் மருமகளாக வரவேண்டும் என எண்ணுகிறாள். இந்த நிலையில், வீட்டிற்கு பொன்னி வருவது சக்தியின் தாய்க்கு பிடிக்கவில்லை. மேலும், பழைய கோபதாபங்களுடன் பொன்னியிடம் கோவமாக நடந்து கொள்கிறாள். இந்த சூழ்நிலையில், சக்தி தனது தோழியான ப்ரீத்தியைத் திருமணம் செய்யப் போவதாக தனது அம்மாவை எதிர்த்து நிற்கிறான். எல்லா பிரச்சனைகளையும் தாண்டி, பொன்னி சக்தி திருமணம் எப்படி நடக்கும் என்பதையே இந்த சீரியல் எடுத்துரைக்கிறது.

பொன்னி சீரியல் இன்றைய எபிசோட்

விஜய் டிவி பொன்னி சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.

பொன்னி சீரியல் இன்றைய எபிசோட்

பொன்னி சீரியல் ப்ரோமோ

திரைக்கு முன்னதாக, விஜய் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பும் பொன்னி சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.

பொன்னி சீரியல் ப்ரோமோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்