Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

madhankumar July 27, 2022 & 17:08 [IST]
நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!Representative Image.

தனுஷ், ரியான் காஸ்லிங், கிரிஷ் எவான்ஸ், அனா டி அர்மாஸ், ஆகியோரது நடிப்பில் கடந்த வாரம் 22 ஆம் தேதி நெட்ப்ளிக்சில் நேரடியான வெளியான ஹாலிவுட் படம் "தி கிரே மேன்". குறைந்த அளவிலான நேரத்தில் வந்தாலும் தனுஷ் நன்றாக நடித்திருந்தார், அவரது ஆக்சன் காட்சிகள் நன்றாக இருந்தது என அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் இரண்டாம் பாகம் மற்றும் ஒரு முக்கியா கதாபாத்திரத்திற்கான தனி படம் என அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை (ஜூலை 28) நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு இன்று தமிழ் மற்றும் தெலுங்கில் அவர் நடிக்கும் "வாத்தி" படத்தின் பர்ஸ்ட் ஃலுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. மேலும் நாளை படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இதனிடையே தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் "நானே வருவேன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் இருந்து தனுஷ் வில் மற்றும் அம்புடன் காட்டிற்குள் நிற்கும் அசத்தலான போஸ்டர் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புழு S தாணு வெளியிட்டுள்ளார்.

மேலும் இன்று மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "திருச்சிற்றம்பலம்" படத்தில் இருந்து அனிருத் இசையில் உருவாகியுள்ள 3வது பாடல் வெளியாகவுள்ளது. இதன் மூலம் தனுஷ் ரசிகர்களுக்கு இந்த வருடம் மறக்க முடியாததாக மாறியுள்ளது என்றே கூறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்