Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திட்டமிட்டதற்கு முன்பே வெளியாகும் தனுஷ் படம்! தேதி மாற்றம் ஏன்?

UDHAYAKUMAR September 07, 2022 & 17:00 [IST]
திட்டமிட்டதற்கு முன்பே வெளியாகும் தனுஷ் படம்! தேதி மாற்றம் ஏன்?Representative Image.

இயக்குநர் செல்வராகவன், தனுஷ் இணையும் புதிய படம் நானே வருவேன் திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே ரிலீஸாகவுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. 

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் தற்போது வெளியாகி திரையரங்குகளில் 2 வாரங்களுக்கு மேல் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி வருகிறது. 100 கோடியைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடி வரும் திருச்சிற்றம்பலத்தை பலர் பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில், தனுஷ் நடிப்பில் அடுத்த படமும் தயாராகிவிட்டது. 

நானே வருவேன் திரைப்படம் முன்னதாக வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதே நாள்தான் பொன்னியின் செல்வன் திரைப்படமும் வரவுள்ளது. முன்னதாக இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது லைகா நிறுவனமே வெளியிடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், நானே வருவேன் திரைப்படம் ஒருநாள் முன்னதாக 29ம் தேதியே வெளியாவதால் பலரும் இந்த படத்தை பார்க்க முன் வருவார்கள். நிச்சயமாக நிறைய தியேட்டர்கள் முதலில் இந்த படத்தை வாங்கி திரையிடும். ஒருவேளை படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் மக்களிடையே அதிக வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் படம் மக்களைக் கவரும். 

அடுத்த நாள் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்களும் இந்த படத்துக்கு செல்வார்கள்.  பொன்னியின் செல்வன் படத்தை நல்ல பெரிய திரையரங்குகளில் காண விரும்புபவர்கள் தானாகவே நானே வருவேன் திரைப்படத்துக்கு தியேட்டர்களைப் பொருட்படுத்தாமல் செல்வார்கள். இப்படி பல கணக்குகள் இருக்கின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்