Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் - கமல்ஹாசன் - வெற்றிமாறன் இணையும் சூப்பர் படம்! அறிவிப்பு எப்போது?

UDHAYAKUMAR September 07, 2022 & 12:30 [IST]
விஜய் - கமல்ஹாசன் - வெற்றிமாறன் இணையும் சூப்பர் படம்! அறிவிப்பு எப்போது?Representative Image.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் விஜய் இணையும் சூப்பர் படம் ஒன்று தயாராகவுள்ளது. இதன் அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழ் சினிமா வரலாற்றையே மாற்றிவிட்டு இனி வரும் படங்களுக்கு பெஞ்ச் மார்க்காக வந்து நிற்கிறது விக்ரம் திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மல்டி ஸ்டாரிங் படம் என அழைக்கப்பட்ட இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய்யுடன் இணையவுள்ளார் லோகேஷ் கனகராஜ். 

வம்சி இயக்கத்தில் வாரிசு என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பல நட்சத்திர பட்டாளங்கள் சூழ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இறுதிக் கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து விஜய், லோகேஷ் படத்தில் இணைவார். 

லோகேஷ் படத்தைத் தொடர்ந்து விஜய் எந்த இயக்குநரின் படத்தில் நடிப்பார் என பேச்சு எழுந்தது. அதில் அட்லீயின் பெயரும், வெற்றிமாறனின் பெயரும் இருந்தது. இருவரது கதையிலும் நடிக்க விஜய் தயாராக இருந்தாலும் வாரிசு, தளபதி 67 படங்களின் வெற்றியைப் பொறுத்தே அடுத்த படத்தை யாருக்கு கொடுப்பது என முடிவு செய்வார் விஜய். 2023 ஜூன் மாதத்துக்கு பிறகு அட்லீயும் தனது பொறுப்புகளை முடித்துவிடுவார். அதற்குள் விஜய்க்கான அடுத்த கதையையும் தயார் செய்துவிடுவார் என்றே தெரிகிறது. எனவே அவர்தான் அடுத்த இயக்குநர். 

வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை வெளிக்கொண்டு வரும் வேலைகளை செய்து வருகிறார். அடுத்து சூர்யாவுடன் வாடிவாசல் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, கமல்ஹாசனுடன் இணைய காத்திருக்கிறார் என கூறப்படுகிறது. இப்போது எழுந்துள்ள சந்தேகம், இதுதான். 

கமல்ஹாசன் அந்த படத்தில் நடிக்கிறாரா இல்லை தயாரிக்கிறாரா. ஆம். விஜய், வெற்றிமாறன் இணையும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்