Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

golden globes award 2023 விருதைத் தட்டிச் சென்ற இந்திய பாடல்!

UDHAYA KUMAR Updated:
golden globes award 2023 விருதைத் தட்டிச் சென்ற இந்திய பாடல்!Representative Image.

RRR படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. இந்திய சினிமா பிரியர்களாக நாம் அனைவரும் பெருமைப் பட வேண்டிய நிகழ்வு இது. 

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் அவரது சகோதரர் எம் எம் கீரவாணி இசையில் வெளியான பாடல் நாட்டு நாட்டு.  ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில் ஜூனியர் என்டி ஆர்  மற்றும் ராம் சரண் ஆகியோர் நடித்திருப்பார்கள். மிகவும் எனர்ஜி மிக்க பாடலான இது நாடு முழுவதும் 5 மொழிகளில் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பரவலாக ஒலித்தது. 

நடனத்துக்கும் பாடலுக்கும் அப்படி ஒரு எனர்ஜி. பலரும் இதனை ரீல்ஸ், ஷார்ட்ஸ் செய்து வெளியிட்டனர். உலகம் முழுக்க இந்த படத்துக்கு மட்டுமின்றி பாடலுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் இந்த பாடலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

ஒரிஜினல் பாடல் பிரிவில் இந்த பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. படக்குழுவினர் மனமுவந்து அந்த விருதைப் பெற்றுக் கொண்டனர். இதுமட்டுமின்றி ஆஸ்கருக்கும் பரிந்துரை செய்யப்பட்டு, பரிந்துரைப் பட்டியலில் இந்த படம் இருக்கிறது. விரைவில் ஆஸ்கர் கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை