Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மர்மமான முறையில் பிரபல நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Nandhinipriya Ganeshan Updated:
மர்மமான முறையில் பிரபல நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..Representative Image.

அமெரிக்காவின் பிரபல நடிகையான ஹெய்டன் பனெட்டீரின் சகோதரர் இளம் நடிகர் ஜேன்சன் பனெட்டீர், இவர் நேற்று நாற்காலியில் அமர்ந்த படியே மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நியூயார்கின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 1994 ஆம் ஆண்டு செப்டரி பிறந்த ஜேன்சன் தனது சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் காட்டிவந்துள்ளார். தனது சகோதரியுடன் டைகர் குரூஸ் என்ற பிரபல டிஸ்னி சேனல் தொடரில் 2004 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். அதன்பின்னர், ஈவன் ஸ்டீவன்ஸ், தி எக்ஸ்.எஸ்,  தி போர்ஜர், தி மார்சியல் ஆர்ட்ஸ் சைல்டு, சம்மர் பார்எவர் மற்றும் லவ் அண்டு லவ் நாட் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார்.

மர்மமான முறையில் பிரபல நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..Representative Image

இந்தநிலையில், நேற்று காலை அவரது வீட்டில் நாற்காலியில் அமர்ந்த படியே மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவரது நண்பர் ஒருவர் ஜேன்சனை காப்பாற்ற முயற்சி செய்துக் கொண்டிருப்பதை கண்டுள்ளனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியல் ஜேன்சனுடன் வர்த்தக விஷயமாக பேசுவதற்கு அங்கு வந்திருந்ததாகவும், நீண்ட நேரம் வெளியில் வராமல் இருந்ததால் அவர் உள்ளே சென்று காப்பாற்ற முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். 

பின்னர் ஜேன்சனின் உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் அந்த ஊர் போலீஸ். ஆனால், ஜேன்சனின் மரணத்திற்கான உண்மையான என்னவாக இருக்கும் என்று குழப்பத்தியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்