Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

nayanthara marriage live நயன்தாராவின் திருமணத்தை வீட்டிலிருந்தே காணலாம்! எப்படி தெரியுமா?

UDHAYA KUMAR June 06, 2022 & 16:47 [IST]
nayanthara marriage live நயன்தாராவின் திருமணத்தை வீட்டிலிருந்தே காணலாம்! எப்படி தெரியுமா?Representative Image.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஓடிடியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது நேரடி ஒளிபரப்போ, எடிட் செய்த வீடியோவோ எதுவாக இருந்தாலும் நாங்கள் கட்டாயம் பார்ப்போம் என ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பைத் தெரிவித்துள்ளனர். 


உலக அளவில் சாதனை படைத்த விக்ரம்! எவ்ளோ வசூல் தெரியுமா?


நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் உறுதியாகியுள்ளது. இவர்களது திருமண விழாவில் நடக்கும் அத்தனை விசயங்களையும் படம் பிடித்து சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கவுள்ளனராம். வரும் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ரிசார்ட்டில் திருமணம் நடைபெறவுள்ளது. அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை முகூர்த்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக திருப்பதியில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், பின்னர் சில காரணங்களுக்காக மகாபலிபுரத்துக்கு மாற்றியுள்ளனர். 

நயன் - விக்கி திருமணத்துக்கு நிச்சயம் அஜித், விஜய், சூர்யா, ரஜினி உள்ளிட்ட பெரிய நடிகர்கள் கலந்துகொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களைப் போலவே தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து 30 விவிஐபிக்கள் உட்பட மொத்தம் 200 பேர்தான் கலந்து கொள்ளவுள்ளனராம். இவர்களின் திருமணம் பல வகை கேமராக்களில் படம்பிடிக்கப்படவுள்ளதாம். 

திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், சென்னையில் பிரபலங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் திருமண வரவேற்பு முந்தைய நாளே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் மேடையேற வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடைபெறவுள்ளது. இவை அனைத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி பிளாட்பாரத்தில் ரசிகர்கள் கண்டு களிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவாம். இது நேரடி ஒளிபரப்பா இல்லை எடிட் செய்த வீடியோவா என்பது குறித்து தகவல் இல்லை. 

திருமண வரவேற்பு - ஜூன் 8

திருமண வரவேற்பு குறித்த தகவல்கள் இங்கு அப்டேட் செய்யப்படும்

திருமணம் - ஜூன் 9 

திருமண நாள் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் இங்கு அப்டேட் செய்யப்படும்

Keywords:

nayanthara marriage live, nayanthara marriage live telecast, Nayan weds wikki, nayanthara marriage netflix, nayanthara marriage pics, nayanthara marriage place, nayanthara marriage ott, nayanthara marriage in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்