Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சினிமா உலகில் இருந்து விலகும் லேடி சூப்பர் ஸ்டார்...

Nandhinipriya Ganeshan September 02, 2022 & 17:20 [IST]
சினிமா உலகில் இருந்து விலகும் லேடி சூப்பர் ஸ்டார்... Representative Image.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா (Diana Mariam Kurian). இவர் கடந்த ஜூன் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனை காதலித்து கல்யாணம் செய்துகொண்டது நம் அனைவருக்கும் தெரியும். ஏனெனில், அந்த அளவிற்கு பரபரப்பாக இணையத்தை கலக்கிக் கொண்டிருந்தது. 

அதன்பின், எத்தனையோ விமர்சனங்களில் சிக்கிய நயன், இப்போது தனது கணவருடன் ஹனிமூன் சென்றுள்ளார். இதற்கிடையில், நயன்தாரா ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நயன் தற்போது ஒப்பந்தம் செய்திருக்கும் படங்களை நடித்து முடித்துவிட்டு நடிப்பில் இருந்து விலகப்போவதாக தெரிவித்துள்ளாராம். இதற்கு காரணம் நயன்தாராவின் குடும்பத்தினர் படப்பிடிப்பின் போது தாலியை கழட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார்களாம். இதனால், தற்போது நயன்தாரா நடித்து வரும் படங்களிலும் தாலியை கழட்டாமல் தான் நடித்து வருகிறாராம்.

ஆனால், பலவிதமான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது கண்டிப்பாக தாலியை கழற்றி வைக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதால், நயன் நடிப்பில் இருந்து விலக திட்டமிட்டுள்ளாராம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்