Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இணையத்தில் புகழப்படும் கோபிநாத்... நீயா நானா இன்றைய எபிசோடில் என்ன நடந்தது...?

UDHAYAKUMAR September 11, 2022 & 18:48 [IST]
இணையத்தில் புகழப்படும் கோபிநாத்... நீயா நானா இன்றைய எபிசோடில் என்ன நடந்தது...?Representative Image.

மட்டம் தட்டிய மனைவி, ஒரு வார்த்தை பேசி அப்பாவை பெருமைப்படுத்திய மகள். கொண்டாடப்பட்ட நீயா நானா செட். சமூகத்துக்கு கெத்தாக ஒன்றை சொன்ன கோபிநாத் என இன்றைய நீயா நானா எபிசோட் வேற லெவலுக்கு இருந்தது. 

தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரு நிகழ்ச்சி மக்கள் மனதில் ஆழமாக பதிந்து அதை நடத்திக் கொண்டிருப்பவர் அவர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்கள் என்றால் அந்த நிகழ்ச்சியின் தரம் அப்படி இருக்கும். நிகழ்ச்சி நடத்துபவரின் திறமை எப்படி இருக்கும் என அலசி ஆராய்ந்துவிடலாம். அப்படி சமூக விவாதங்களை அலசி ஆராயும் நிகழ்ச்சிதான் நீயா நானா. 

பல்வேறு வகையான டாபிக்குகளை எடுத்து அலசி ஆராய்ந்து நல்ல பாய்ண்டுகளை எடுத்து வைத்தவர்களுக்கு பரிசும் கொடுத்து அனுப்புவார்கள். வந்தவர்கள் நிதானமாக அணுகி அவர்களுக்கு சமவாய்ப்பு கொடுத்து பேச வைத்து, பாமரர்களிடமிருந்து கண்டெண்ட்களை வாங்க நீயா நானா கோபிநாத்தும் அவரது டீமும் நன்றாக வேலை செய்கின்றனர். 

 கணவன்மார்கள் ஒருபுறமும் அவர்களை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிமார்கள் ஒருபுறமும் அமர்ந்து விவாதிக்கும் விவாதகளமாகிப் போனது இன்றைய நிகழ்ச்சி. அதிலும் குறிப்பாக ஒரு நபரை பேசவைத்து அவரை பாராட்டிய கோபிநாத்தான் இன்றைய பேசுபொருள். 

படித்த மனைவி, படிக்காத கணவர், அவர்களின் பெண் குழந்தை அம்மாவை நோக்கி கவரப்படுகிறது. விவரம் தெரியும் வரை அப்பா பாசத்திலிருந்த மகள் அம்மாவை நோக்கி ஈர்க்கப்படுவதாக உணர்கின்றனர் மனைவியும் கணவரும். கணவருக்கு வருத்தம் இருந்தாலும் சம்பாதிக்கும் மனைவி அவரைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார் போலும். படிப்பு பெரிதாக இல்லாத காரணத்தால், தன்னுடைய அடுத்த தலைமுறை படிக்காத தற்குறியாகிவிடக்கூடாது என படித்த சம்பாதிக்கும் பெண்ணைத் திருமணம் செய்தேன். மகள் தன் மீது பாசம் இருந்தாலும் மதிப்பெண் பட்டியலில் கையெழுத்து வாங்க தன்னிடம் வராமல் மனைவியிடம் போவது வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார் அவர். 

ஆனால் அவரது மனைவியோ இவரை கேலி கிண்டல் செய்வது, படிக்காதவர், ஏபிசிடியைக் கூட ஒரு மணி நேரம் படிப்பார் என குத்திக் காண்பித்து பேசிக்கொண்டிருந்தார். அவர் இன்னமும் 90ஸ் லயே இருக்கார் என கணவரைக் கூறியதும் கோபிக்கு கடுமையாக கோபம் வந்தது. ஆனால் வெளிக்காட்டாமல் ஒன்றைச் சொன்னார். 

எல்லாருக்கும் எல்லாமே தெரியாது. எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்னு அவசியமும் இல்ல. ஆனந்தமாக இருக்குறதுக்கு அறிவா இருக்கணும்னு அவசியம் இல்ல. நா விட்டத எம்புள்ள புடிச்சிருச்சினு ஒரு புராகரஸ் ரிப்போர்ட்ட ஒரு மணி நேரம் பார்க்குற தந்தை எனக்கு காவியமாக தெரிகிறார்.

வேறலெவலுக்கு போன நீயா நானா எபிசோடைத் தவறாமல் காண ஹாட்ஸ்டாரில் பாருங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்