Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ninaithen Vandhai ஒரு நாயகன் இரண்டு நாயகி! யாரைத் தேர்ந்தெடுத்தார் விஜய்?

UDHAYA KUMAR May 18, 2022 & 15:50 [IST]
Ninaithen Vandhai ஒரு நாயகன் இரண்டு நாயகி! யாரைத் தேர்ந்தெடுத்தார் விஜய்?Representative Image.

விஜய், தேவயானி, ரம்பா நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான படம் நினைத்தேன் வந்தாய். இந்த படத்தில் மணிவண்ணன், சார்லி, செந்தில் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். கே. செல்வபாரதி இயக்கியுள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று விஜய்யின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. 

கோகுல கிருஷ்ணன் (விஜய்) ஒரு இசைக் கலைஞன். தன்னுடைய கனவில் ஒரு பெண்ணை பார்க்கிறான். முகம் தெரியாவிட்டாலும், அந்த பெண்ணின் ஒரு முக்கிய அடையாளத்தை வைத்து அவளை தேட ஆரம்பிக்கிறான். அடையாளம் குறித்து அவரது மச்சான்களும் மாமனும் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். தெரிந்து கொண்டதும் ஒரே அதிர்ச்சி. காரணம் அந்த பெண் முகம் தெரியாது அவளின் தொப்புளுக்கு அருகில் மச்சம் இருக்கிறது என விஜய் கூற அனைவரும் டென்சன் ஆகிறார்கள்.

முன்னதாக அவளை எங்கு பார்த்தாய் என கேட்கும்போதும் கனவில் பார்த்தேன் என சொல்ல, அதுக்கும் டென்சன் ஆகி நாற்காலிகளை விட்டெறிந்தனர் அனைவரும். இறுதியில் வேறு வழி இல்லை அவளைத் தேடித்தான் ஆகவேண்டும் என முடிவுக்கு வருகிறார்கள். 

ஆனால் தனது மகனுக்கு திருமண வயது தாண்டிவிட்டது உடனடியாக திருமணம் செய்ய பெண் பார்க்க ஏற்பாடு செய்கிறார் கோகுல கிருஷ்ணனின் தந்தை சந்தனக் கவுண்டர். கிராமத்திலிருந்து ஒரு தேவதையைத் தேடி பார்த்துக் கொண்டு வருகிறார் திருமண தரகர்.  

பெண் பார்க்க செல்கிறார்கள். அங்கே அழகிய கிராமம். தேவயானிதான் பெண். சில குழப்பங்களுக்கு மத்தியில் வேறு வழியின்றி திருமணத்துக்கு சம்மதிக்கிறார் விஜய். திரும்பி ஊர் வருகிறார்கள். 

வேறொரு கல்யாணத்தில் சொப்னாவை பார்க்கிறார் கோகுல கிருஷ்ணன். அவர்தான் தான் கனவில் பார்த்த கதாநாயகி என தெரியவர, எப்படியாவது திருமணத்தை நிறுத்திவிட்டு தனது ஆசை நாயகியை கரம்பிடிக்க நினைக்கிறார். இப்படியாக கதை நீளுகிறது. கதையில் டுவிஸ்ட் என்னவென்றால் இருவரும் அக்கா, தங்கைதான். 

சகோதரிகள் இருவரில் யாரைத் திருமணம் செய்கிறார் கோகுல கிருஷ்ணன் என்பதே கிளைமேக்ஸ். 

KEYWORDS:

நினைத்தேன் வந்தாய் சாங்,
நினைத்தேன் வந்தாய் Ennavale Ennavale,
நினைத்தேன் வந்தாய் mp3 சாங் டவுன்லோட்,
Ninaithen Vandhai movie online,
Ninaithen Vandhai movie,
Ninaithen Vandhai Tamil Movie download isaimini,
Ninaithen Vandhai Full Movie Download In Tamilrockers,

ninaithen vandhai mp3 song download,
ninaithen vandhai masstamilan,
ninaithen vandhai movie download isaimini,
ninaithen vandhai songs lyrics,
ninaithen vandhai tamilyogi,
ninaithen vandhai heroine name,
ninaithen vandhai story,
ninaithen vandhai wiki,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்