Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Coffee With Kadhal Review : யாருக்கு யார் ஜோடி..? காபி வித் காதல்...... திரை விமர்சனம்!

Manoj Krishnamoorthi November 04, 2022 & 12:10 [IST]
Coffee With Kadhal Review : யாருக்கு யார் ஜோடி..?  காபி வித் காதல்...... திரை விமர்சனம்!Representative Image.

சரியான துணையுடன் இல்லாமல் இருப்பதற்கு தனிமை சிறந்தது என்ற  ஆறுதல் உடன் காபி வித் காதல் திரைப்படம் வெளிவந்துள்ளது.  காதல், காமெடி, செண்டிமெண்ட்  என கலந்து சுந்தர்.C படைப்பில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு என பல நட்சத்திரங்களின் நடிப்பில் ரிலீஸான "காபி வித் காதல்" படம் ஒரு பார்வை. படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ் அனைத்தும் இங்கே உள்ளது. 

Coffee With Kadhal Review : யாருக்கு யார் ஜோடி..?  காபி வித் காதல்...... திரை விமர்சனம்!Representative Image

கதைக்களம் (Coffee With Kadhal Review)

யார் யாரை காதலிக்கிறார் என்ற கதை தான் காபி வித் காதல். இது முக்கோண காதல் அல்ல எந்த கோணத்தில் எபார்த்தாலும் காதல் கலாட்டா தான். கதையின் ஒரு நாயகி தியா (மாலவிக்கா ஷர்மா) மற்றும் ஜெய்க்கு நடக்கும் நிச்சயதார்த்தத்தில் இருந்து கிளைமேக்ஸில் யாருக்கு யார் ஜோடி என்பதை காமெடி கலந்த ரோமன்ஸ் உடன் கொண்ட காபி வித் காதல்  (Coffee With Kadhal Review) ஆகும். 

Coffee With Kadhal Review : யாருக்கு யார் ஜோடி..?  காபி வித் காதல்...... திரை விமர்சனம்!Representative Image

திரை பார்வை  (Coffee With Kadhal Review)

திரைக்கதையில் காமெடியை கதைக்கு தகுந்தது போல நகர்த்துவதில் இயக்குநர் சுந்தர். C  கில்லாடி ஆகும்.  கல்யாண கலாட்டா என்ற மையத்தில் கதை சுழலகிறது, திருமண பெண்ணை விரும்பும் ஜீவா, முதலில் விருப்பப்பட்டு கல்யாணத்திற்கு ஒத்து கொள்ளும் ஜெய் என கதையில் இவர்கள் இருவருக்குள் முக்கோணக் காதல் போட்டி வரும் என்று பார்த்தால், அங்கு தான் கதையில் திருத்தம் வருகிறது. 

முதலில் தியா ஆசைப்படும் ஜெய் பின் அபி (அமிர்தா ஐயர்) மீது காதல் கொள்கிறார். சரி பிரச்சனை முடிந்தது என நினைப்பதிற்குள் இன்னொரு திருப்புமுனை வருகிறது. அது ஜீவாவின் அண்ணனாக வரும் ஸ்ரீகாந்த் தான், இவரின் கவரும் படியான கேரக்டருக்கு நடுவில் ஜோகிபாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி காமெடி வருகிறது. 

Coffee With Kadhal Review : யாருக்கு யார் ஜோடி..?  காபி வித் காதல்...... திரை விமர்சனம்!Representative Image

கதையில் கதாநாயகிக்கு குறையே இல்லை என்பது போல் திரும்பும் பக்கம் எல்லாம்  பல கதாபாத்திரத்தில் ஹீரோயின்களை இயக்குநர் கதையில் புகுத்துள்ளார். இந்த திரைபடத்டிற்கு மிக்கபெரிய பலம் யுவனின் இசை மற்றும் சுந்தர். Cயின் டைமிங் காமெடி ஆகும். 

கலகலப்பான கதை, செண்டிமெண்ட், ரோமன்ஸ் என அனைத்து கொண்டு பக்க பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும் அவ்வப்போது திரைக்கதியில் ஏற்படும் தொய்வு நம்மை கதையில் இருந்து வெளி கொண்டு வருகிறது. 

கதை- 3/5

திரைகதை- 3/5

காமெடி- 4/5

இசை- 4/5

ஒளிப்பதிவு- 3.75/5     

இயக்கம்- 3.75/5

மொத்தத்தில் கவலை மறந்து இனிமையாக பொழுதை கழிக்க வைக்கும் காமெடி கலந்த ரோமன்ஸ் திரைப்படம்  (Coffee With Kadhal Review) காபி வித் காதல் ஆகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்