Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பா ரஞ்சித்தின் அடுத்த பட அப்டேட் இதுதான்!

UDHAYA KUMAR May 19, 2022 & 12:47 [IST]
பா ரஞ்சித்தின் அடுத்த பட அப்டேட் இதுதான்!Representative Image.

பா. ரஞ்சித் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கும் புதிய படமான ஜே.பேபி-ன் டீஸர் வரும் மே 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டு வெளியாகும் படம் என கூறப்படுகிறது. 

பா. ரஞ்சித் இயக்குநராக இருந்தாலும்  ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, தன்னைப் போல் எளிய மனிதர்களும் இயக்குநர்களாக ஆக வேண்டும் என எண்ணி அதற்குரிய நல்ல கதைகளைக் கேட்டு நல்ல திரைப்படங்கள் தனது பேனரில் செய்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரை வால் உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இருந்தார். அப்படி ஒரு படம்தான் இந்த ஜே பேபி.  வெங்கட் பிரபு மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்த சுரேஷ் மாரி இயக்கும் இந்த படத்தின் டீசர் அறிவிப்புதான் இது. 

ஜே.பேபி படத்தில் ஊர்வசி, தினேஷ், விஜய்டிவி மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நகைச்சுவை, அன்பு, பாசம், குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் கலந்ததாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்