Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரம் பிரபுவின் "பாயும் ஒளி நீ எனக்கு" - ஜூன் 16ல் ஆடியோ, டிரைலர் ரிலீஸ்!

Saraswathi Updated:
விக்ரம் பிரபுவின் Representative Image.

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள பாயும் ஒளி நீ எனக்கு எனும் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வரும் 16ம் தேதி வெளியாகிறது.

தமிழ் திரையுலகில் அறிமுக இயக்குனராக அடியெடுத்துவைத்துள்ள கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் "பாயும் ஒளி நீ எனக்கு".

கதையின் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். நாயகியாக வாணிபோஜன் களமிறக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் நடிகர்கள் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தினை  குமாரசுவாமி பத்திக்கொண்டா தயாரித்துள்ளார்.  மஹிதி ஸ்வர சாகர் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். படத்தின் வெளியீட்டிற்கான இறுதிக்கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வரும் 16ம் தேதி வெளியிடப்படுகிறது. அதைத் தொடரந்து ஜூன் 23ம் தேதி  "பாயும் ஒளி நீ எனக்கு" திரைக்கு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்