Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'இவரை தான் காதலிக்கிறேன்'.. தனது காதலை கன்பார்ம் செய்த தமன்னா.. | Tamanna Bhatia in Relationship

Nandhinipriya Ganeshan Updated:
'இவரை தான் காதலிக்கிறேன்'.. தனது காதலை கன்பார்ம் செய்த  தமன்னா.. | Tamanna Bhatia in RelationshipRepresentative Image.

நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவைக் காதலித்து வருவதாக  கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய தமன்னா, 'நான் ஒரு நடிகருடன் சேர்ந்து நடிப்பதாலேயே அவர்கள்மீது காதல் வரும் என்று நான் நினைக்கவில்லை.

இதுவரை நான் எத்தனையோ நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால், அவர்களில் யார் மீதும் எனக்கு காதல் வரவில்லை. இருப்பினும், விஜய்வர்மாவிடம் தனிப்பட்ட ஏதோ ஒன்றை உணர்ந்துள்ளேன். அவரை கண்டதும் வாழ்க்கை துணையை கண்டுபிடித்தது போல ஒரு மகிழ்ச்சி. அவருக்காக நான் எதுவும் செய்யாமலேயே என் உலகத்தைப் புரிந்துகொண்ட ஒருவராக  இருக்கிறார்.

'இவரை தான் காதலிக்கிறேன்'.. தனது காதலை கன்பார்ம் செய்த  தமன்னா.. | Tamanna Bhatia in RelationshipRepresentative Image

சமீபகாலமாக என்னுடைய அளவற்ற மகிழ்ச்சிக்கு அவர்தான் காரணமாக இருக்கிறார். எனக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது தான் காதல் வந்தது' இவ்வாறு கூறினார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமன்னாவுக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். தமிழில்  நடிகை தமன்னா தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்