Tue ,Jun 25, 2024

சென்செக்ஸ் 77,957.96
616.88sensex(0.80%)
நிஃப்டி23,680.45
142.60sensex(0.61%)
USD
81.57
Exclusive

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டுடே எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay Tv Pandian Stores Serial

Nandhinipriya Ganeshan Updated:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டுடே எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay Tv Pandian Stores SerialRepresentative Image.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: கடந்த அக்டோபர் 1, 2018 லிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பல இடையூறுகளுக்கு மத்தியிலும் தங்கள் பொருளாதார நிலையையும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்த கடுமையாக உழைக்கும் சத்தியமூர்த்தி மற்றும் அவரது மூன்று தம்பிகளின் தியாகங்கள், போராட்டங்களை மையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சகோதரர்களின் பிணைப்பு, குடும்ப உணர்வுகள் மற்றும் பல்வேறு சதி போன்றவை பெரும்பாலானோர் நெஞ்சங்களை கவர்ந்துள்ளது. 

இந்த சீரியல் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பபட்டு வருகிறது. தற்போது இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

ஸ்டாலின் முத்து

சத்தியமூர்த்தி பாண்டியன் (மூர்த்தி)

சுஜிதா தனுஷ்

தனலட்சுமி சத்தியமூர்த்தி (தனம்)

வெங்கட் ரெங்கநாதன்

ஜீவானந்தம் பாண்டியன் (ஜீவா)

கவிதா கவுடா / ஹேமா ராஜ்குமார்

மீனாட்சி ஜீவானந்தம் (மீனா)

குமரன் தங்கராஜன்

கதிரவன் பாண்டியன் (கதிர்)

சரவணன் விக்ரம்

கண்ணன் பாண்டியன் (கண்ணன்)

வி.ஜே.சித்ரா / காவ்யா அறிவுமணி / லாவண்யா 

முல்லை கதிரவன்

வைஷாலி தனிகா / சாய் காயத்ரி / வி.ஜே.தீபிகா

ஐஸ்வர்யா கண்ணன்

ஷீலா

லட்சுமி பாண்டியன்

எஸ்.டி.பி ரோசரி

முருகானந்தம் (முல்லையின் அப்பா) 

சாந்தி வில்லியம்ஸ்

பார்வதி (முல்லையின் அம்மா)

வெங்கட் சுபா / ரவி சந்திரன்

ஜனார்த்தன் (மீனாவின் அப்பா)

ஸ்ரீவித்யா சங்கர்

காமாட்சி (மீனாவின் அம்மா)

டேவிட் சாலமன் ராஜா

ஜெகநாதன் (ஜெகா)

மீனா செல்லமுத்து 

கஸ்தூரி ஜெகநாதன்

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

சேனல்

ஸ்டார் விஜய் டிவி

ரிலீஸ் தேதி

 01 அக்டோபர் 2018

ஒளிப்பரப்பு நேரம்

08.00 PM - 08.30 PM [20-22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

சிவா சேகர் (எபிசோடுகள் 1-550)
டேவிட் சார்லி (551–தற்போது)

தயாரிப்பாளர்

எஸ்.ஜெயலட்சுமி

எழுத்து

பிரியா தம்பி

எடிட்டிங்

கே. சங்கர்

ஒளிப்பதிவு 

-

திரைக்கதை

பிரியா தம்பி

இசையமைப்பாளர்

இளையவன்

தயாரிப்பு நிறுவனம்

வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட்

ஓடிடி தளம்

டிஸ்னி+ஹாட்ஸ்டார்

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதை..

பாண்டியன், லட்சுமி தம்பதிக்கு சத்தியமூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகிய 4 மகன்கள் பிறக்கின்றனர். பண நெருக்கடியால் பாண்டியன் தற்கொலை செய்து கொள்கிறார். மூத்த மகன் சத்தியமூர்த்தி  தன்னுடைய ஊனமுற்ற தாய் லட்சுமி, மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் ஆகியோரை கவனித்துக் கொள்கிறார். இந்த ஐந்து பேரும் தங்கள் வாழ்க்கையை நடத்த பல்வேறு போராட்டங்களுக்கு சமாளிக்கிறார்கள்.

தனம் ஒரு படித்த மற்றும் நல்ல உள்ளம் கொண்ட பெண் தனது குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக சத்தியமூர்த்தியை திருமணம் செய்து சத்தியமூர்த்தியின் குடும்பத்தையே பொறுப்பேற்கிறார். மூர்த்தியின் சகோதரர்களைத் தன் குழந்தையாகப் பார்த்துக் கொள்கிறாள், அதனால் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்துவிடுகின்றனர். காரைக்குடி கிராமம் முழுக்க ஒரு பிரபலமான மளிகைக் கடையைக் கட்டி அதற்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்று பெயர் வைத்துள்ளனர். சகோதரர்கள் வளர்ந்ததும், மூர்த்தியின் முதல் தம்பியான ஜீவாவுக்கும் லட்சுமியின் அண்ணனின் மகளான முல்லைக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பம் ஏற்பாடு செய்கிறது. ஆனால் ஜீவா மீனாவை காதலிப்பதால் திருமணத்தில் உடன்பாடிவில்லை. மீனாவின் குடும்பம் பணக்காரர் என்பதால் ஜீவாவை மறுத்துவிட்டனர். 

ஜீவா-முல்லையின் திருமணத்தன்றே, மீனா தனது வீட்டை விட்டு ஓடிப்போய் திருமண மண்டபத்திற்குள் சென்று, ஜீவாவை எல்லோர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்க, பிரச்சனையை தவிர்ப்பதற்கு மீனா-ஜீவாவுக்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறார் தனம். அதேபோல், முல்லையின் வாழ்க்கை வீணாகக்கூடாது என்பதற்காக மூர்த்தியின் இரண்டாவது தம்பி கதிருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். 

இந்த இரண்டு தம்பதிகளுக்கு இடையேயான தகராறைத் தீர்த்து, மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த தனம் பல போராட்டங்களைச் சந்திக்கிறார். கதிர் மற்றும் முல்லை ஆரம்பத்தில் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள். ஆனால் பின்னர் ஒருவரையொருவர் காதலிக்கி தொடங்குகிறார்கள். அதேபோல், இளைய சகோதரர் கண்ணன் தனது குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பிறகு குடும்பத்தின் ஒற்றுமையை பராமரிக்க தனம் என்ன முயற்சி எடுக்கிறார், என்ன சவால்களை சந்திக்க போகிறார் என்பதே கதைக்களம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, விஜய் டிவி வெளியிடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்