Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வன் டீசரை வெளியிடும் பிரபலங்கள்...யார் யார் தெரியுமா..?

madhankumar July 08, 2022 & 11:33 [IST]
பொன்னியின் செல்வன் டீசரை வெளியிடும் பிரபலங்கள்...யார் யார் தெரியுமா..?Representative Image.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் தான் "பொன்னியின் செல்வன்". வரலாற்று படமான இதன் கதை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்படுவதாகும். 

ராஜராஜ சோழன் மன்னராக அரியணை ஏறுவதற்கு முன்னர் நடக்கும் கதையை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் முதல்பாகம், இந்த ஆண்டு வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. படத்தின் இரண்டு பாக்கங்களையும் மணிரத்னம் எடுத்துவிட்டதாகவும் அடுத்த பாகத்திற்கான ரிலீஸ் தேதி முதல் பாக்க வெளியீட்டிற்கு பின்னர் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையியல் இந்த வார தொடக்கத்தில் "சோழன் வருகிறான்" என்ற தலைப்பில் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட படக்குழு இந்த வாரம் முழுவது படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என கூறியிருந்தது. அந்தவகையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்திருக்கும் நடிகர் "விக்ரம்" போஸ்டர் முதலாவதாக வெளியாகியது. அடுத்து வந்திய தேவனாக நடித்திருக்கும் நாடுகள் "கார்த்தி"யின்  போஸ்டர் வெளியாகியது.

மேலும் நந்தினியாக நடித்திருக்கும் நடிகை "ஐஸ்வர்யா ராய்" போஸ்டர் வெளியாகியது. கடைசியாக நேற்று குந்தவையாக நடித்திருக்கும் நடிகை "திரிஷா" வின் போஸ்டர் வெளியாகியது. இந்நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியாகும் என பட குழு தெரிவித்துள்ளது.

மாலை 6 மணியளவில் வெளியாகும் இந்த படத்தின் தமிழ் மொழியின் டீசரை நடிகர் சூர்யாவும், தெலுங்கு பதிப்பின் டீசரை நடிகர் மகேஷ் பாபுவும், இந்தி டீசரை நடிகர் அமிதாப் பச்சனும் வெளியிடுகின்றனர். அதேபோல், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும், கன்னடத்தில் நடிகர் ரக்சி ஷெட்டியும் வெளியிடுகின்றனர்.  

நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த தருணம் இன்று நடைபெற உள்ளது. எனவே ரசிகர்கள் அனைவரும் சோழர்களை வரவேற்க ஆவலுடன் காத்திருகிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்