Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வன் விழாவுக்கு வர அஞ்சி நடுங்கும் பெரிய பிரபலங்கள்? மாற்றம் ஏன்?

UDHAYA KUMAR June 30, 2022 & 18:31 [IST]
பொன்னியின் செல்வன் விழாவுக்கு வர அஞ்சி நடுங்கும் பெரிய பிரபலங்கள்? மாற்றம் ஏன்?Representative Image.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைத்து நடத்தலாம் என படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். ஆனால் இந்த திட்டத்தில் ஒரு பிரச்னை இருப்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது. காரணம் பிரபலங்கள் பலரும் இந்த கோவிலுக்குள் செல்ல அச்சப்படுகிறார்களாம். அப்படி என்ன இருக்கிறது இந்த கோவிலில் என கேட்பவர்களுக்கு ஒரு பெரிய வரலாற்று கதையே சொல்லப்படுகிறது. 

இந்திரா காந்தி முதன்முதலில் இந்த கோவிலுக்கு வருகை தந்தார். தடபுடலாக வரவேற்பு எல்லாம் நடந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆரும் இந்த விழாவில் கலந்துகொண்டார். விழா முடிந்து சில நாட்களிலேயே எம் ஜி ஆருக்கு உடல்நிலை மோசமாகி கிட்டத்தட்ட 6 மாத காலங்கள் முதலமைச்சர் பதவியை விட்டு விலகி மருத்துமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். இதே காலக்கட்டத்தில்தான் இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது மிகவும் துரதிஷ்டவசமாக பார்க்கப்படுகிறது. இன்றும்கூட இதனை நினைத்து பெரிய பிரபலங்கள் பயப்படுகிறார்கள். 

இந்நிலையில்தான், நிகழ்ச்சியை வேறு இடத்துக்கு மாற்றுவது என்றும் விழாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரையும் அழைக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள். நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கில் நிகழ அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. 

Keywords: 

ponniyin selvan teaser release date, ponniyin selvan audio launch, ponniyin selvan 1 release date, 
ponniyin selvan trailer release date,ponniyin selvan producer,ponniyin selvan music director,ponniyin selvan heroine,ponniyin selvan twitter,ponniyin selvan: i,ponniyin selvan movie,

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்