Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரம் உடல்நலக் குறைவு! அப்ப பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு?

Udhaya Kumar July 08, 2022 & 15:39 [IST]
விக்ரம் உடல்நலக் குறைவு! அப்ப பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு?Representative Image.

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றதும் உடனடியாக காட்டுத் தீ போல பரவி பலரும் வருத்தப்படுவதும் பிரார்த்தனை செய்வதுமாக இருக்கின்றனர். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் விக்ரம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, விக்ரமுக்கு பெரிய அளவில் உடல் நல பிரச்னை இல்லை எனவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தெரியவந்துள்ளது. தேவையற்ற வதந்தியைத் தவிர்க்க  விக்ரம் தரப்பிலிருந்து விரைவில் தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என தகவல் பரவியிருந்து பின்னர் அது மாரடைப்பு இல்லை வேறு பிரச்னை எனவும் கூறப்பட்டது. எதுவாக இருந்தாலும் விக்ரம் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே நம் அனைவரின் வேண்டுதலாக இருக்கும். 

மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீஸர் வெளியீடு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் விக்ரம் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக விழா ஒத்திவைக்கப்படுமா எனவும் பேச்சு எழுந்துள்ளது. எனினும் ஏற்பாடுகள் முன்னரே தொடங்கிவிட்டதால், விழா நடப்பது உறுதி என தகவல் கிடைத்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்