Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pottikku Potti போட்டிக்கு போட்டி ஆர் யூ ரெடி - நம்ம மதுரை சிஸ்டர் வெற்றி!

UDHAYA KUMAR May 26, 2022 & 17:09 [IST]
Pottikku Potti போட்டிக்கு போட்டி ஆர் யூ ரெடி - நம்ம மதுரை சிஸ்டர் வெற்றி!Representative Image.

SUN TV, VIJAY TV., ZEE Tamil தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக அடுத்தடுத்து சீரியல்களை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே தமிழக மக்கள் மனதில் வரவேற்பை பெற்று வருகிறது.  காலம் காலமாக சீரியல்களைப் பார்த்து வரும் தமிழ் ரசிகர்களை கவரும் விதமாக அம்மன் 3, எங்க வீட்டு மீனாட்சி, வள்ளி திருமணம், இதயத்தை திருடாதே 2, அபி டெய்லர்,  இது சொல்ல மறந்த கதை,  சில்லுனு ஒரு காதல் என தொடர்ந்து நல்ல நல்ல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றது. 

விஜய் டிவி போலவே,  சனி, ஞாயிறுகளில் சுவாரஸ்யமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.  அப்படி ஒரு நிகழ்ச்சிதான் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும்  'போட்டிக்குப் போட்டி: R U Ready??' என்ற புத்தம் புதிய விளையாட்டு நிகழ்ச்சியாகும்.  கடந்த ஏப்ரல்  3ம் தேதி துவங்கி  ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தினங்களில், இரவு 8.00 மணிக்கு  ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி இதுவாகும்.  DANCE VS DANCE SEASON 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவனா பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள், நிகழ்ச்சிகளில் நடிக்கும் பிரபல நட்சத்திரங்கள், ஒருவருக்கொருவர்  பல்வேறு சவால்கள் கொண்ட போட்டியில் களமிறங்குகின்றனர். இந்த நிகழ்ச்சி, ஒரு லீக் வடிவ போட்டியாக நடத்தப்படுகிறது.  இந்நிகழ்ச்சியில் இரண்டு குழுக்களாக பிரிந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் மோதி வருகின்றனர். தொடக்க விழாவின் போது குழு A – ல் சில்லுனு ஒரு காதல், அபி டெய்லர், வள்ளி திருமணம் மற்றும் இதயத்தை திருடாதே நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் மற்றும் குழு B -ல் இது சொல்ல மறந்த கதை, அம்மன் 3, நம்ம மதுரை சிஸ்டர்ஸ் மற்றும் மீரா ஆகிய நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் இடம் பெற்றனர்.

நடனம், பாட்டு, புதிர்போட்டியுடன் நகைச்சுவை நயாண்டிக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் நடுவராக பாபா பாஸ்கர் மாஸ்டர் பங்கேற்றுள்ளார். இந்த வாரம் நடைபெறும் நிகழ்ச்சியில் மதிப்பெண்களை வாரி வழங்கியுள்ளார் பாபா பாஸ்கர் மாஸ்டர். அவர் கொடுக்கும் கமெண்ட்டில் எதிரணி எவ்வளவு டார்ச்சர் செய்தாலும், இரிடேட் ஆனாலும் அவங்களே இரிடேட் ஆகுற அளவுக்கு நீங்க பாடியிருக்கீங்க என்பதால் உங்களுக்கு 18 மதிப்பெண்களைத் தருகிறேன் என்கிறார். 

பெண்களிடம் கேட்கும்போது அவர்கள் 23 மதிப்பெண்களை வாரி வழங்கியுள்ளனர். நம்ம மதுரை சிஸ்டர் மொத்தமாக 261 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. சேலஞ்ச் செய்து எதிரணியை வீழ்த்தியுள்ளது நம்ம மதுரை சிஸ்டர் அணி. 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்