Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

yaaradi nee mohini nakshatra VJ சித்ராவுக்கு நடந்ததுதான் இந்த நடிகைக்கும் நடக்கப்போகுது! - ஸ்ரீநிதி பகீர்

UDHAYA KUMAR May 26, 2022 & 15:17 [IST]
yaaradi nee mohini nakshatra  VJ சித்ராவுக்கு நடந்ததுதான் இந்த நடிகைக்கும் நடக்கப்போகுது! - ஸ்ரீநிதி  பகீர்Representative Image.

விஜே சித்ரா மரணம் தொடர்பாக பேசி வந்த ஸ்ரீநிதி தற்போது தனது தோழியான நடிகை ஒருவரைப் பற்றியும் பேசியுள்ளார். அதில் விஜே சித்ரா என்ன ஆனாரோ அவருக்கு என்ன நடந்ததோ அதேதான் இவருக்கும் நடக்கப்போகிறது என பகீர் அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் என்ன என்ன என கேட்டு வருகின்றனர்.

ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளயிட்டு அதை சில மணி நேரத்திலேயே டெலிட் செய்துவிட்டார். அந்த வீடியோவில் பேசியது மிகவும் சர்ச்சைக்குரிய விசயமாக இருக்கிறது. அதில் விஜே சித்ராவுக்கு நிகழ்ந்தது தனது தோழியும் நடிகையுமான நட்சத்திராவுக்கும் நடக்கப்போகிறது என தெரிவித்திருந்தார். 

நட்சத்திராவுக்கு ஒரு பையனை மிகவும் பிடிச்சிருக்கிறது எனவும் அவரின் பெயரை சொல்ல விரும்பவில்லை எனவும் ஆரம்பித்த ஸ்ரீநிதி,  அவனை அறிமுகம் செய்ததே தான்தான் எனும் தொணியில் பேசுகிறார். அவனோ இவளை கல்யாணம் வரை கொண்டு சென்றுவிட்டான் எனவும், நக்ஷூ ரொம்ப பாவம் அவளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் எனவும் கூறியுள்ள ஸ்ரீநிதி,  நவம்பர் 18ம் தேதி நட்சத்திராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என கூறியுள்ளார். அது தான் உட்பட தங்கள் நட்பு வட்டாரத்தில் யாருக்கும் தெரியாது என தெரிவித்த அவர், இப்படி ஏமாற்றுகிறார்களே என வருத்தப்படும் தொணியில் பேசினார். 

சித்துவைப் போலவே இவளுக்கும் ஆகிவிடும் என பயப்படுவதாகவும், நட்சத்திராவை மிஸ் யூஸ் செய்கிறார்கள் எனவும் கூறி வருகிறார். இப்படியே போயிட்டுருந்தா நாளைக்கு சித்துவுக்கு ஏற்பட்ட நிலைதான் நக்ஷூவுக்கும் என தெரிவித்துள்ள அந்த வீடியோவை சில மணி நேரத்துக்குள்ளேயே டெலிட் செய்துவிட்டார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்